எஸ்பிஆர் இந்தியா குழுமத்தின் மாபெரும் மொத்த விற்பனை சந்தை அமைவிட செயல்திட்டமான மார்க்கெட் ஆஃப் இந்தியா (MOI), அதன் அமைவிட வளாகத்தில் கடந்த 11, 12 ஆகிய இரு நாட்களில் ‘குடும்பத் திருவிழா’ என்ற நிகழ்வை முதன் முறையாக நடத்தியது.
குடும்பத்திலுள்ள அனைத்து நபர்களுக்கும் மகிழ்ச்சியளிக்கும் குதூகலமான இந்நிகழ்வில், மாயாஜால நிகழ்ச்சிகள், நகைச்சுவை நிகழ்வுகள், கேளிக்கை போட்டிகள் ஆகியவை இடம்பெற்றிருந்தன.
குடும்ப திருவிழா கொண்டாட்டத்தில் 125-க்கும் அதிகமான ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன. நுழைவுக்கட்டணம் ஏது மில்லாத இலவச பங்கேற்பு நிகழ்ச்சியாக நடைபெற்றது. இரு நாட்களிலும் நிகழ்ந்த இக்கொண்டாட்ட நிகழ்வின் இறுதி முத் தாய்ப்பு நிகழ்வாக அற்பு தமான இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
“சென்னையின் சாலைகளில்”
“சென்னையின் சாலைகளில்” (“On the streets of Chennai”)என்ற தலைப்பிடப்பட்ட இந்த இசை நிகழ்ச்சியில் சூப்பர்சிங்கர் புகழ் மாளவிகா ஸ்ரீனிவாஸ் வழங்கிய பல இசைப்பாடல்கள் பார்வையாளர்களை உற்சாகத்தோடு நடனமாட வைத்தது.
இளம் யோகா நிபுணரும், யோகாவில் கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தியவருமான வைஷ்ணவி நிகழ்த்திய யோகா செயல்பாடுகள் பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்தன.
மார்க்கெட் ஆஃப் இந் தியா செயல்திட்டம் பற்றி வாடிக்கையாளர்களும், பொதுமக்களும் நன்றாக அறிந்துகொள்ளுமாறு அவர்களை இந்த அமைவிடத்திற்கு வரவழைப்பதும் மற்றும் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய இந்த நகரியத்தில் மகிழ்ச்சியும், மனநிறைவும், பொழுது போக்கும் அடங்கிய இனிய சூழலில் வசிப்பதிலுள்ள ஆதாயங்களையும், சாதக மான அம்சங்களையும் பொதுமக்கள் அறியுமாறு காட்சிப்படுத்துவதுமே இந்த குடும்பத் திருவிழாவை மார்க்கெட் ஆஃப் இந்தியா நேர்த்தியாக ஏற்பாடு செய்து நடத்தியதன் நோக்கமாகும்.
கலாச்சார நிகழ்வுகளுக்கான சிறப்பான அமைவிடமாக இங்கு அமைந்திருக்கும் புதிய சென்ட்ரல் பிளாஸாவை ஆக்குவதும் இந்நிகழ்வை நடத்தியதற்கான ஒரு குறிக்கோளாகும்.
குடும்பத் திருவிழா நடத்தப்பட்ட விதம் மற்றும் செய்யப்பட்டிருந்த சிறப்பான ஏற்பாடுகள் பார்வையாளர்கள் மற்றும் ஸ்டால்களை அமைத்திருந்த தொழில் முனைவோர்கள் ஆகிய இருதரப்பினருக்கும் மகிழ்ச்சியையும், திருப்தியையும் அளித்திருக்கிறது.