fbpx
Homeபிற செய்திகள்டாக்டர் என்.ஜி.பி இன்ஸ்டிடியூட் - சினெர்ஜி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

டாக்டர் என்.ஜி.பி இன்ஸ்டிடியூட் – சினெர்ஜி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை டாக்டர் என்.ஜி.பி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் துறை, சினெர்ஜி இன் கார்ப்பரேஷன் நிறுவனம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த நிகழ்வில் என்ஜிபி ஐடெக் கல்லூரி செயலாளர் டாக்டர் தவமணி டிபழனிசாமி, மற்றும் சினெர்ஜி இன் கார்ப்பரேஷன் பிசினஸ் தலைவர் பாலமுருகராஜா கருப்பையா , என்ஜிபி ஐடெக் முதல்வர் டாக்டர் எஸ்.யு. பிரபா, துறைத் தலைவர் டாக்டர் எம்.ஜி. சுமித்ரா மற்றும் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் துறை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விவரங்களை முதல்வர் விவரித்தார். சுகாதாரத் துறையை நோக்கி மறு வாழ்வு மற்றும் முதுகெலும்பு பிசியோதெரபி மேம்பாட்டில் சமீபத்திய போக்குகளுக்கான இரு நிறுவனங்களும் ஒரே மாதிரியான இலக்குகளைக் கொண்டிருப்பதாகவும், மாணவர்களின் வளர்ச்சிக்கு
ஆசிரியர்கள் மேற்கொள்ளும் தொடர் முயற்சிகள் மற்றும் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்தார்.

எக்ஸோஸ்கெலட்டன் அமைப்பு மற்றும் மெய்நிகர் மறுவாழ்வு ஆகியவற்றின் தற்போதைய முன்னேற்றங்கள் பற்றி பாலமுருகராஜா கருப்பையா, எடுத்து ரைத்தார்.

படிக்க வேண்டும்

spot_img