ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், எப்போதும்வென்றான் சோலைசாமி திருமண மண்டபத்தில் எப்போதும்வென்றான், மீனாட்சிபுரம், சந்திரகிரி உள்ளிட்ட ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் துவக்கி வைத்து வருவாய்த்துறை சார்பில் பட்டா பெயர் மாற்றுதல் பணி ஆணை,மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் மற்றும் வேளாண்மை துறை சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்வில் ஒட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சித்தார்த்தன், சசிகுமார், வட்டாட்சியர் அறிவழகன், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் சுசிலா, ஒட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் காசிவிஸ்வநாதன், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், எப்போதும் வென்றான் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சோலைசாமி திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் முத்துக்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் முத்துராஜ், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் பாலமுருகன், மாவட்ட பிரதிநிதிகள் சத்யராஜன், வெள்ளைச்சாமி, சந்திரகிரி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சந்தனராஜ், குதிரைக்குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகையா வேடநத்தம் முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் ஆனந்த் ஆற்றங்கரை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சீத்தாராமன் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய தேர்தல் பார்வையாளர் சாமி சுப்புராஜ் கிளை செயலாளர்கள் கணேசன், லட்சுமணன், தகவல் தொழில்நுட்ப அணி கண்ணன் உள்ளிட்ட பொதுமக்கள், துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



