fbpx
Homeபிற செய்திகள்‘மான்யவர்’ புதிய பிராண்ட் அம்பாசிடர் ‘ராம் சரண்’

‘மான்யவர்’ புதிய பிராண்ட் அம்பாசிடர் ‘ராம் சரண்’

சுபநிகழ்ச்சிகளுக்கான ஆடவர் ஆடைகளுக்கான இந்தியாவின் முன்னணி ஃபேஷன் பிராண்டான மான்யவர், சர்வதேச அளவில் புகழ்பெற்ற பிரபலமும், உலகளாவிய நடிகருமான ராம் சரண்-ஐ விளம்பர தூதராக நியமித்துள்ளது.

திருமணம் மற்றும் பண்டிகை காலத்தின் துவக்கத்தைக் குறிக்கும் TaiyaarHokarAiye என்கிற புதிய விளம்பரப் பிரச்சாரத்துடன் ராம் சரண் நியமனத்தை மான்யவர் பிராண்டு கொண்டாட்டத்துடன் துவங்கியுள்ளது.

சமகால இந்தியாவின் கலாச்சார சாராம்சத்தை இயல்பாக வெளிப்படுத்தும், ராம் சரண், உலக அரங்கில் நவீன இந்திய ஆடவர்களின் அற்புத உதாரணமாகத் திகழ்கிறார் என்றால் அது மிகையல்ல.

அவரது நன்மதிப்புகளும் மான்யவரின் தொலைநோக்கு சிந்தனையும் ஒருமித்ததாக உள்ளது. காண்போரை கவரும் அவரது வசீகரமும், பிரபல்யமும் – மேன்மையான அழகிய ஆடைகளின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தினை கொண்டுள்ள மான்யவர் பிராண்டுக்கு ஒரு புதிய பரிமாணத்தை சேர்த்துள்ளது.

ராம் சரண் கூறுகையில், ‘புதுமை, பாரம்பரியம் மற்றும் குடும்ப நன்மதிப்புகளின் மீது மான்யவர் கொண்டுள்ள அர்ப்பணிப்பும், எனது தனிப்பட்ட கொள்கைகளும் ஒத்துப்போவதாக உள்ளன. திருமணங்கள் மற்றும் பண்டிகைகளைக் கொண்டாடுவது என்பது பெருமையான, மற்றும் மகிழ்ச்சியான ஒரு தருணமாகும்.

அத்தகைய சுப நேரங்களில், மான்யவரின் ஸ்டைலான ஃபேஷனுடன் இருப்பதைக் காட்டிலும் வேறு என்ன சிறப்பாக இருக்க முடியும்’ என்றார்.

வேதாந்த் ஃபேஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை வருவாய்
அதிகாரியான, வேதாந்த் மோடி பேசுகையில், “ராம் சரண் கம்பீரம், வசீகரம் மற்றும் உலகளவில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் ஆற்றல் உள்ளிட்ட சிறப்புகளுடன் அவர் நமது அடையாளமாக இருக்கிறார்” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img