கோவையில் திமுக வர்த்தகர் அணி நிர்வாகிகளின் அறிமுக ஆலோசனைக் கூட்டம்- பெரியார் மற்றும் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நிர்வாகிகள்.
கோவை மாநகர், வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக வர்த்தகர் அணி நிர்வாகிகளின் அறிமுக ஆலோசனைக் கூட்டம் திமுக தலைமை அலுவலகத்தில் நடை பெற்றது.
திமுக மாநில வர்த்தகர் அணியின் இணைச் செயலாளர் முருகவேல் தலைமையில் நடை பெறும் இக்கூட்டத்தில் கோவை மாநகர் மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் மாரிசெல்வன், வடக்கு மாவட்ட அமைப்பாளர் வேலுசாமி, தெற்கு மாவட்ட அமைப்பாளர் கண்ணன், மாநகர் மாவட்ட தலைவர் சுப்பிரமணி உட்பட பலர் முன்னிலை வகிக்கின்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தின் துவக்கத்தில் திமுக கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து சிறப்புரை ஆற்றினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கோவை மாவட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். இக்கூட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நிகழ்ச்சிகள் நடத்தப் டுவது குறித்தும் கட்சியின் ஆக்க பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
முன்னதாக கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் மற்றும் அண்ணாவின் சிலைக்கு கோவை மாநகர் மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் மாரிசெல்வன் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.