ஓப்போ இந்தியா தனது சேவை மையம் 3.0 மூலம் விற்பனைக்குப் பிந்தைய சேவையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இது இந்தியா முழுவதும் 25,000 பின்கோடுகளுக்கு அதன் பிக்-அப் மற்றும் டிராப் சேவையை (எடுத்துச் செல்லுதல் மற்றும் கொண்டுவருதல்) விரிவுபடுத்துகிறது.
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, சாஃப்ட்வேர் பிரச்சினைகள், ஸ்கிரீன் மற்றும் பேட்டரி மாற்றுதல், ஸ்பீக்கர் சேதம், டச்ஸ்கிரீன் செயலிழப்பு உள்ளிட்ட அனைத்து ஸ்மார்ட்போன் பழுதுபார்ப்புகளிலும் 80% விரைவான 24- மணி நேர டிஏடி (TAT)(திருப்பு நேரம்) உத்தரவாதம் அளிக்கும் செயல்முறை திறன்களை சிறப்பாக அமைத்துள்ளது.
24 மணி நேர செண்ட்-இன் ரிப்பேர் சேவையின் கீழ், வாடிக்கையாளர்கள் ஓப்போ இந்தியா இணையதளத்தில் செண்ட்-இன் பழுதுபார்க்கும் படிவத்தை சமர்ப்பிப்பதன் மூலம் தங்கள் ஸ்மார்ட்ஃபோனுக்கான இலவச பிக்-அப் மற்றும் டிராப்களை திட்டமிடலாம்.
இங்கே, அவர்கள் பிக்-அப் முகவரியுடன் சாதனத்தின் ஐஎம்இஐ (IMEI) எண் மற்றும் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும். ஓப்போ இந்தியாவின் 24 மணி நேர பழுதுபார்க்கும் டிஏடி (TAT), சாதனம் சேவை மையத்தை அடைந்தவுடன் தொடங்குகிறது.
ஓப்போ இந்தியாவின் சிஎம்ஓ, தமியன்த் சிங் கானோரியா கூறியதாவது:
எங்கள் பயனர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு வசதியையும் திருப்தியையும் நாங்கள் மறுவரையறை செய்கிறோம், ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் ஓப்போ அனுபவத்தை எளிதில் பெறக்கூடியதாக மாற்றுகிறோம் என்றார்.