fbpx
Homeபிற செய்திகள்மலபார் கோல்டு - டைமண்ட்ஸ் கோவையில் புதுப்பிக்கப்பட்ட ஷோரூம்-வானதி சீனிவாசன் திறந்து வைத்தார்

மலபார் கோல்டு – டைமண்ட்ஸ் கோவையில் புதுப்பிக்கப்பட்ட ஷோரூம்-வானதி சீனிவாசன் திறந்து வைத்தார்

மலபார் குழுமத்தின் முன்னோடி நிறுவனமான மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனம் தனது புதுப்பிக்கப்பட்ட ஷோரூமை இன்று கோவையில் திறந்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட ஷோரூமில் இரண்டு தளங்களில் அதிகமான இடவசதி, அதிகமான கலெக்சன்கள், அதிகமான டிசைன்கள் ஆகியவை இதில் இடம் பெற்றுள்ளன. புதுப்பிக்கப்பட்ட இந்த ஷோரூமை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் திறந்து வைத்தார்.

திறப்பு விழாவில் யாசர் (மலபார் கோல்டு- டைமண்ட்ஸ் தமிழ்நாடு மண்டல தலைவர்), சபீர்அலி (மலபார் கோல்டு தமிழ்நாடு மண்டல வணிக தலைவர்), நௌசாத் (மலபார் கோல்டு தமிழ்நாடு மேற்கு மண்டல தலைவர்), மனு (மலபார் கோல்டு – டைமண்ட்ஸ் கோவை கிளை தலைவர்), ரனீஸ் (மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் கோவை கிளை துணை தலைவர்), மற்றும் மலபார் கோல்டு – டைமண்ட்ஸ் மேலாண்மை உறுப்பினர்கள் மற்றும் கிளை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஷோரூமில் ஏராளமான தங்கம், வைரம், மற்றும் வெள்ளி, நகைகளின் தொகுப்புகள் உள்ளன. அணிந்தாலே ஜொலிக்கும் வைர நகைகளான ‘மைன்’ பிரம்மாண்டமான வடிவ மைப்புகளை கொண்டுள்ள வெட்டாதவைரத்தால் செய்யப்பட்ட ‘எரா’ மிகவும் பொக்கிஷமாக கருதப்படும் விலை உயர்ந்த கற்களால் செய்யப்பட்ட நகை தொகுப்பான ‘பிரீசியா’ நகைகள், கைவினை கலைஞர்களால் கையால் செய்யப்பட்ட நகைகளின் தொகுப்பான ‘எத்தினிக்’ நமது கலாச் சாரத்தை பிரதிபலிக்கும் பாரம்பரிய இந்திய நகை வடிமைப்புகளில் உருவான ‘டிவைன்’ குழந்தைகளுக்கான நகை தொகுப்பான ‘ஸ்டார்லெட்’ ஆகியவை இந்த ஷோரூமில் இடம் பெற்றுள்ளன.

படிக்க வேண்டும்

spot_img