fbpx
Homeபிற செய்திகள்உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு புற்றுநோயை வென்ற 75 நோயாளிகளுக்கு ஜெம் மருத்துவமனையில் பாராட்டு விழா

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு புற்றுநோயை வென்ற 75 நோயாளிகளுக்கு ஜெம் மருத்துவமனையில் பாராட்டு விழா

உலக புற்றுநோய் தினத்தைமுன்னிட்டு கோவை ஜெம் மருத்துவமனையில் புற்றுநோயுடன் உயிர் பிழைத்த 75 நோயாளிகளை அம்மருத்துவமனை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நோயாளிகள் தங்கள் பயணத்தையும் வெற்றிகரமான போராட்டத்தையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர். இவர்களில் பலர் வயிறு, குடல், இரைப்பை மற்றும் மகளிருக்கு வரக்கூடிய புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள்.

புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் முழுமையாகக் குணப்படுத்த முடியும் என்ற விழிப்புணர்வை பரப்பும் நோக்கத்துடன் வாழ்க்கையைக் கொண்டாடுதல் என்ற பொருளில் நடந்த இந்த நிகழ்வில் ஆடியும் பாடியும் நோயாளிகள் கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும் புற்றுநோய் அறுவைச் சிகிச்சையின் முன்னேற்றங்களை தெரியப்படுத்தும் விதமாக ஜெம் மருத்துவமனை அர்ப்பணிப்புடன் இந்த மருத்துவ சேவையை வழங்கி வருகிறது. புற்றுநோயின் அறுவை சிகிச்சையை மேம்படுத்தும் விதமாக ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை துறையை உருவாக்கி உள்ளது.

ஜெம் மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை மற்றும் பரிசோதனையை மேற்கொள்ளும் திட்டத்தின் பயனாளிகள் அனைவருக்கும் மருத்துவ நல அட்டைகள் இந்த விழாவில் வழங்கப்பட்டன. ஜெம் மருத்துவமனையின் இணை நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி டாக்டர் பிரவீன் ராஜ், இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள் மற்றும் பயனாளிகள் பற்றி விளக்கினார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக கோவை மாநகராட்சி ஆணையாளர் எம்-.பிரதாப் கலந்து கொண்டு தரமான மருத்துவ சேவையை வழங்குவதற்காகவும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருவதற்காகவும் பாராட்டு தெரிவித்தார். மேலும் புற்று நோயை வென்றவர்களுக்கு நினைவுப் பரிசுகளையும் அவர் வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் ஜெம் மருத்துவமனை மருத்துவர்கள், ஊழியர்கள், ரோட்டரி சங்கத்தினர், நோயாளிகளின் உறவினர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img