உலகின் சில்லறை நகை விற்பனையில் வேகமாக வளர்ந்து வரும் முன்னணி நிறுவனமும் இந்தியாவில் பல்வேறு துறைகளில் கால்பதித்து தனது வர்த்தகத்தை விரிவாக்கிக் கொண்டுள்ள மலபார் குழுமத்தின் முன்னோடி நிறுவனமான மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் தனது 22வது புதிய ஷோரூமை காரைக்குடியில் திறந்துள்ளது.
அதிகமான இடவசதி கொண்ட இந்த ஷோரூமில் விதவிதமான நகை மாடல்கள், டிசைன்கள் ஆகியவை இந்த ஷோரூமில் இடம்பெற்றுள்ளன. «
ஷாரூமை காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாங்குடி திறந்துவைத்தார்.
இந்தநிகழ்ச்சியின்போது யாசர் (மலபார் கோல்டு & டைமண்ட்ஸ், தமிழ்நாடு மண்டலத் தலைவர்), சபீர்அலி (மண்டல வணிகத் தலைவர்), சுதீர்முகமது (கிழக்கு மண்டலத் தலைவர்), அமீர்பாபு (வடக்கு மண்டலதலைவர்), நௌசாத் (மேற்கு மண்டலத் தலைவர்), முகமதுஅசுர் (காரைக்குடி கிளை இணைத்தலைவர்) மற்றும்ம லபார் கோல்டு & டைமண்ட்ஸ் மேலாண்மை உறுப்பினர்கள் மற்றும் கிளை ஊழியர்கள் உடனிருந்தனர்.
தொகுப்புகள்
இந்த ஷோரூமில் ஏராளமான தங்கம், வைரம், மற்றும் வெள்ளி, நகைகளின் தொகுப்புகள் உள்ளன. அணிந்தாலே ஜொலிக்கும் வைர நகைகளான ‘மைன்’, பிரம்மாண்டமான வடிவமைப்புகளை கொண்டுள்ள வெட்டாத வைரத்தால் செய்யப் பட்ட ‘எரா’, மிகவும் பொக் கிஷமாகக் கருதப்படும் விலைஉயர்ந்த கற்களால் செய்யப்பட்டநகை தொகுப்பான ‘பிரீசியா’ நகைகள், கைவினை கலைஞர்களால் கையால் செய்யப்பட்ட நகைகளின் தொகுப்பான ‘எத்தினிக்’ நமது கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் பாரம் பரிய இந்திய நகை வடிமைப்புகளில்உருவான ‘டிவைன்’ குழந்தை களுக்கான நகை தொகுப்பான ‘ஸ்டார் லெட்’ஆகியவை இந்த ஷோரூமில் இடம் பெற்றுள்ளன.



