fbpx
Homeபிற செய்திகள்‘மிஸ் தமிழ்நாடு 2023’ பட்டம் வென்றார் சிமாட்ஸ் என்ஜினியரிங் கல்லூரி மாணவி

‘மிஸ் தமிழ்நாடு 2023’ பட்டம் வென்றார் சிமாட்ஸ் என்ஜினியரிங் கல்லூரி மாணவி

சென்னையில் நடை பெற்ற ‘மிஸ்டர் அன்ட் மிஸ் கிராண்ட் தமிழ்நாடு 2023’ போட்டியில் சிமாட்ஸ் என்ஜினியரிங் கல்லூரியில் பயோடெக் என்ஜினியரிங் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவி நிஹாரிகா மாதவன் ‘மிஸ் தமிழ்நாடு 2023’ பட்டத்தை வென்றதோடு ‘மிஸ் கிளாமரஸ் லுக் 2023’ என்ற விருதையும் பெற்றார்.

பேஷன் ஷோ

சிமாட்ஸ் பல்லைக்கழக வளாகத்தில் சவீதா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் அன்ட் டெக்னிக்கல் சயின்சஸ் சார்பில் டார்லின்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சவீதா ஆர்க்கிடெக்சர் அன்ட் டிசைன் கல்லூரி ‘மிஸ்டர் அன்ட் மிஸ் கிராண்ட் தமிழ்நாடு 2023’ மற்றும் பேஷன் ஷோ நிகழ்ச்சியை நடத்தியது.

இறுதிப் போட்டிக்கு முன் நடைபெற்ற தகுதிச் சுற்று போட்டியில் பல்வேறு தொழில்துறை மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் கலந்து கொண்டனர்.

அதில் தங்கள் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தியவர்கள் தேர்வு செய்யப்பட்டு இறுதிப் போட்டியில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக 2018ம் ஆண்டு மிஸ் இந்தியாவாக தேர்வு செய்யப்பட்ட அனுகீர்த்தி வாஸ் கலந்து கொண்டார்.

இதில் சிமாட்ஸ் பல்கலைக்கழக வேந்தர் என்.எம். வீரையன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். போட்டியில் கலந்து கொண்டவர்கள் அவர்களின் ஒய்யார நடை, அணுகுமுறை, ஆளுமை மற்றும் நம்பிக்கை, திறமை, அழகு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர். இதில் சிமாட்ஸ் என்ஜினியரிங் கல்லூரி மாணவி நிஹாரிகா மாதவன் ‘மிஸ் தமிழ்நாடு 2023’ பட்டத்தை வென்றார்.

படிக்க வேண்டும்

spot_img