கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளான சிறுமுகை, காரமடை, தேக்கம் பட்டி, வெள்ளியங்காடு, தோலம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் கடந்த 21 ஆம் தேதி மாலை சூறாவளி காற்றுடன் கூடிய கன மழை பெய்தது.
இதனால் இப்பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த பல்லாயிரக் கணக்கான வாழை மரங்கள் முறிந்து நாசமாயின. இதனால் வாழை விவசாயிகள் கவலையில் ஆழ்ந்தனர்..
இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி நேற்று மாலை வெள்ளியங்காடு, தேக்கம்பட்டி ஊராட்சிகளுக்குட்பட்ட பல் வேறு பகுதிகளில் சூறாவளி காற்றால் சேதமடைந்த வாழை பயிர்களை நேரில் ஆய்வு செய்து மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் சந்திரன், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் சுசீந்திரா உள்ளிட்ட அதிகாரிகளுடன் கலந் தாலோசனை மேற்கொண்டார்.
மேலும், சேதமடைந்த பயிர்களை கணக்கீடு செய்யும் பணிகளை விரைவுப்படுத்த அதிகாரிகளிடம் அவர் அறிவுறுத்தினார். இதன் பின்னர் அப்பகுதி மக்களிடம் பேசிய கிராந்தி குமார் பாடி தெரிவித்ததாவது: கடந்த 21 ஆம் தேதி மாலை 5 மணி அளவில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் வட்டத்தில் 13 கிராமங்களிலும், அன்னூர் வட்டத்தில் 4 கிராமங்களிலும் வாழை பயிர்கள் சேதமடைந்துள்ளது.
பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை, தென்னை உள்ளிட்ட 1.46 லட்சம் மரங்கள் சேதமடைந்துள்ளதாக வருவாய் மற்றும் தோட்டக்கலை துறையினர் கணக்கீடு செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளி டம் பட்டா, சிட்டா அடங்கல், வங்கி கணக்கு விபரம் உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. வருவாய்த்துறை, தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறையினரின் உதவியுடன் சேத மதிப்பீடு கணக்கீடு செய்யப்பட்டு அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
நடவடிக்கை
விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும். விவசாய பயிர்கள் சேதம் அடைவதை தவிர்க்க பயிர் காப்பீடு ஒன்று மட்டுமே நிரந்தர தீர்வு, அதில் சில சிக்கல்கள் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். சிக்கல்களை களைய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மேலும் இப்பகுதியில் சட்ட விரோத கனிம வளக்கொள்ளை குறித்து சிறப்புக்குழு ஒன்று மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட் டுள்ளது. அக்குழுவினர் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கனிமவளக்கொள்¬ ளயில் ஈடுபடும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியருடன் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.



