காவேரி மருத்துவமனைகள் குழுமத் தின் ஓர் அங்கமான, சென்னை ஆழ் வார்பேட்டையில் அமைந்துள்ள காவேரி மருத்துவமனையில், 24 வயத £ன ஆண் நபருக்கு வெற்றிகரமான சிறுநீரக உறுப்புமாற்று சிகிச்சையை ரோபோ உதவியுடன் நடந்தது.
காவேரி இன்ஸ்டிடியூட் ஆஃப் ரோபோட்டிக் சர்ஜரி என்ற பெயரில் இயங்கும் இம்மையம், பொதுவான இரையககுடலியல் அறுவைசிகிச்சை செயல்முறைகள், உயிருள்ள தானமளிப் பவரிடமிருந்து பெறப்படும் கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சைகள், சிறுநீரக உறுப்பு மாற்றுசிகிச்சைகள் மற்றும் புற்றுநோய்க்கான அறுவைசிகிச்சைகள் ஆகியவற்றை மிக நவீன ரோபோ தொழில்நுட்ப உதவியுடன் வழங்கி வருகிறது.
சிறுநீரக உறுப்புமாற்று செயல்முறையின்போது ரோபோ தொழில்நுட்ப உதவியுடனான அறு வைசிகிச்சைகளை வழங்குவதற்கு தமிழ்நாட்டில் இயங்கி வரும் வெகுசில உயர்சிகிச்சை மையங்களுள் காவேரி மருத்துவமனையும் ஒன்று.
24 வயதானவர், கடந்த 3 ஆண்டுகளாக சிறுநீரகப் பிரச்சனை க்காக டயாலிசிஸ் சிகிச்சையின் கீழ் இருந்து வந்தார்.
பின்னோட்ட நோய் என அறியப்படும் ஒரு பாதிப்பும் மற்றும் விரிவடைந்திருக்கும் சிறுநீர் குழாய் பிரச்சனையும் மரபியல் ரீதியாக பிறப்பிலிருந்தே இவருக்கு இருந்திருக்கிறது.
குணமடைந்து மீள்வதற்கான இந்நோயாளியின் பயணத்தில் எதிர்கொள்ள வேண்டியிருந்த பல சவால்களுக்கு அடிப்படை காரண மாக இது அமைந்திருந்தது. காவேரி மருத்துவமனையில், மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவதற்கு முன்பு, ஏறக்குறைய 90 கிலோ என்ற அதிக உடற்பருமன் மற்றும் இவர் எதிர்கொண்ட பிற உடல்நல சிக்கல்களின் காரணமாக பிற மருத்துவமனைகளில் இவரது இரு சிறுநீரகங்களையும் அகற்றுவதற்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
உறுப்புமாற்று சிகிச்சை குழு
இவரது மருத்துவ வரலாற்றையும், சாத்தியமுள்ள இடர்வாய்ப்புகளையும் மிக கவனமாகவும், விரிவாகவும் மதிப்பீடு செய்ததற்குப் பிறகு, இவரது இயற்கையான சிறுநீரகங்களை அகற்றாமல் விட்டுவிடுகின்ற உறுப் புமாற்று சிகிச்சையை காவேரி மருத்துவமனையின் உறுப்புமாற்று சிகிச்சை குழுவினர் திட்டமிட்டனர்.
இந்நோயாளியின் தந்தை, இவருக்குப் பொருத்தமான தானமளிப்பவராக அடையாளம் காணப்பட்டார். இந்த இளைஞருக்கு செய்யப்பட்ட சிறுநீரக உறுப்புமாற்று மருத்துவ செயல்முறையில் மேம்பட்ட நவீன, ரோபோட்டிக் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.
‘பாரம்பரிய முறையில் வழக்கமாக செய்யப்படும் சிறுநீரக உறுப்புமாற்று செயல்முறையானது, திறந்தநிலை அறுவைசிகிச்சையாக மேற்கொள்ளப்படும். தானம் பெறப் பட்ட சிறுநீரகத்தை உட்பதியம் செய் வதற்கு கீழ்ப்புற அடிவயிற்றில் ஒரு பெரிய அளவிலான கீறல் செய்வது அவசியமாக இருக்கும்.
மென்மையான, சிறுநீரக தமனிக¬ ளயும், சிரைகளையும், உடலின் ரத்தநாளங்களோடு இணைப்பதும் மற்றும் சிறுநீர் குழாயை சிறுநீர் பையுடனும் இணைப்பது இந்த வழிமுறையிலான அறுவைசிகிச்சையில் தேவைப்படும். 30-க்கும் மிகைப்பட்ட உடல்நிறை எண் (பிஎம்ஐ) கொண்டிருக்கும் நோயாளிகளுக்கு இத்தகைய முறையிலான திறந்த நிலை அறுவைசிகிச்சையில் குண மடைந்து மீள்வதற்கான செயல்முறை மெதுவானதாகவும், வலி நிறைந்ததாகவும் இருக்கும்.
அத்துடன், வெளியில் தெரியக்கூடிய அளவு காய தழும்புகளும் இதனால் ஏற்படும்.
இதற்கு மாறாக, ஏறக்குறைய 5 செ.மீ. என்ற அளவிலான சிறிய கீறலை பயன்படுத்தி, ரோபோ உதவியுடன் காவேரி மருத்துவமனையில் செய்யப் படும் சிறுநீரக உறுப்புமாற்று செயல் முறையில் மிக மிக குறைவான ஊடுருவல் அணுகுமுறையே இடம்பெறுகிறது.
இதன் வழியாக தானமாக பெறப்பட்ட சிறுநீரகத்தை அடிவயிற்றுக்குள் உட்பதியம் செய்து, ரத்த நாளங்களையும், சிறுநீர் குழாயையும் தானம் பெறுபவரின் உடலோடு இணைக்கிற நுட்பமான செயல்முறையை அறுவைசிகிச்சை நிபுணர் மேற்கொள்கிறார்.
இந்த புத்தாக்கமான தொழில்நுட்ப உத்தி மிக உயர்ந்த அளவிலான துல்லியத்தை சிகிச்சை செயல்முறையில் சாத்தியமாக்குகிறது. சிகிச்சைக்குப் பிறகு விரைவாக இயல்புநிலைக்குத் திரும்ப உதவுவதோடு, குறைவான வலி, மிகச்சிறிய தழும்புகள், குறைவான காலத்திற்கே மருத்துவமனையில் தங்கும் காலம் ஆகிய பல ஆதாயங்கள் இதில் கிடைக்கின்றன.
வெற்றிகரமான இச்சிகிச்சைக்குப் பிறகு மிக விரைவாகவே தனது தினசரி நடவடிக்கைகளை சிகிச்சை பெற்ற நோயாளியால் மீண்டும் தொடங்க முடியும்’ என்று காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் பல்வேறு உறுப்பு மாற்று சிகிச்சைப் பிரிவின் முதன்மை மருத்துவர் டாக்டர் சாமிநாதன் சம்பந்தம் தெரிவித்தார்.
காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வ ராஜ் கூறியதாவது:
ரோபோட்டிக் சிறுநீரக உறுப்புமாற்று செயல்முறைகளை அறிமுகம் செய்திருப்பதன் மூலம், நாட்பட்ட தீவிர சிறுநீரக நோய்களால் அவதியுறும் நோயாளிகளுக்கு சிறந்த தீர்வுகளை வழங்கி, அவர்களின் வாழ்க்கையை மேம் படுத்துவது மீது தனது பொறுப்புறுதியை மருத்துவமனை, தனது செயல்பாடுகளின் மூலம் நேர்த்தியாக வெளிப்படுத்தி வருகிறது.
அதிக இடர்வாய்ப்புள்ள நோயாளிக்கு பொருத்தமான தீர்வை நவீன ரோபோ சாதன உதவியோடு வழங்கி, 24 வயதான இளைஞருக்கு வாழ்க்கையில் புது அத்தியாயத்தை எழுத உதவியிருக்கும் டாக்டர் சுவாமிநாதன் மற்றும் அவரது குழுவினருக்கு பாராட்டுகள் என்றார்.