வாடிப்பட்டியில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் மாற்றுத் திறனாளி களுக்கு, மருத்துவ சான்று வழங்க மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது.
மதிப்பீட்டு முகாம்
வாடிப்பட்டி வட்டார வள மையத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் மாற் றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்று வழங்க மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது. மருத் துவ இணை இயக்குனர் செல்வராஜ், முதன்மை கல்வி அதிகாரி கார்த்திகா தேவி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
மருத்துவர்கள் சிவப் பிரசாத், வசந்தகுமார், உஷாராணி முத்துலட்சுமி, வேல்முருகன் ஆகியோர் கண் பார்வை, காது கேளாமை ,மனநலம் பாதிப்பு உள்ளிட்டவைகள் குறித்து பரிசோதித்தனர்.
மாவட்ட உதவி திட்ட அலுவலர்கள் கார்மேகம், சரவண முருகன், வட்டார கல்வி அலுவலர்கள் ஷாஜகான் ,அகிலத்து இளவரசி, மேற்பார்வையாளர் தமிழ்ச்செல்வி, ஆசிரியர் பயிற்றுநர்கள் பெரிய கருப்பன், சரஸ்வதி, பாண்டிகுமார், லட்சுமி, அலெக்ஸ் பாண்டியன், சிறப்பு ஆசிரியர்கள் ரூபா, உமா, பிசியோதெரபிஸ்ட் கார்த்திகா ,முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.