இந்திய இரைப்பை குடல் எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சை நிபு ணர்கள் சங்கத்தின் சார் பாக கோவையில் நாளை தொடங்கும் கருத்தரங்கில் இந்தியா மட்டுமின்றி அண்டை நாடுகளில் இருந்தும் மருத்துவ நிபுணர்கள் கலந்து கொள்ள உள்ளதாக சங்கத்தின் தலைவர் டாக்டர் தங்கவேலு தெரிவித்துள்ளார்.
இந்திய இரைப்பை குடல் எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சை நிபு ணர்கள் சங்கம் (IAGES) கடந்த 1993ம் ஆண்டு துவங்கப்பட்டு, இந்தியா மட்டுமின்றி, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும், பத்தாயிரம் உறுப்பினர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது.
இரைப்பை குடல் தொடர்பான சிகிச்சையில் நவீன மாற்றங்கள் தொடர்பான கருத்த ரங்குகளை இச்சங்கம் நடத்தி வருவதோடு ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது.
கருத்தரங்கம்
இச்சங்கத்தின் இருபதாவது தேசிய அளவிலான கருத்தரங்கம் கோவை கொடிசியாவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இது தொடர்பான செய் தியாளர்கள் சந்திப்பு கோவை அஸ்வின் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
இதில் இந்திய இரைப்பை குடல் எண் டோஸ்கோபி அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் தங்கவேலு, பொருளாளர் டாக்டர் மாதேஸ் ஆகியோர் பேசினர்.
வரும் 10 ந்தேதி (நாளை) துவங்கி 12ம் தேதி வரை நடைபெற உள்ள இதில், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இளம் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் இந்தியா மற்றும் அண்டை நாடுகளிலிருந்தும் கலந்து கொள்ள உள்ளதாகவும் மேலும் இதில், அனுபவம் மற்றும் புகழ்மிக்க அறுவை சிகிச்சை பேராசிரியர்கள், நிபுணர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பயிற்சி அளிக்க உள்ளதாகவும் அப்போது தெரிவித்தனர்.
குறிப்பாக இரைப்பை குடல் அறுவை சிகிச்சையில் தற்போது உள்ள நவீன தொழில்நுட்பங்கள், அறுவை சிகிச்சைகள் குறித்து இளம் நிபுணர்க ளுக்கு நேரடி ஒளிபரப்பின் வாயிலாக காண்பிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.
கருத்தரங்கில் தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் ஆராய்ச்சி நிறு வனத்தின் முன்னாள் இயக்குனர் பேராசிரியர் கங்காதர், கே.எம்.சி.எச் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி, ஈஷா அமைப்பின் தலைவர் சத்குரு ஜக்கி வாசுதேவ், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத் துணை வேந்தர் பேராசிரியர் கீதா லட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.