fbpx
Homeபிற செய்திகள்மதுரை திமுக மகளிர் அணி சார்பில் 2,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

மதுரை திமுக மகளிர் அணி சார்பில் 2,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் 2,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மதுரை விரகனூர் ஊராட்சியில் நடைபெற்றது.

இந்த விழா, மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சேடபட்டி மு. மணிமாறன் தலைமையிலும், திருப்பரங்குன்றம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் தனபால் முன்னிலையிலும் நடைபெற்றது.

இதில், மதுரை தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி அமைப்பாளர் கிருத்திகா தங்கபாண்டி, 2,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். தொடர்ந்து, அவர் திமுக அரசின் சாதனைகள் மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்காக செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து பேசினார்.

இந்நிகழ்வில், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் சிவகாசி வனராஜா, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் பாண்டி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், திமுக கிளை செயலாளர் பா.சந்திரன், மாவட்ட பொருளாளர் கொம்பாடி தங்கம், மாநில தகவல் தொழில் நுட்ப அணி இணைச் செயலாளர் பாச பிரபு, மாவட்ட இலக்கிய அணியின் துணை அமைப்பாளர் தமிழ் ராஜா, மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் பிரமிளா பீமன், மகளிர் அணி நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், திமுக முன்னோடிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img