fbpx
Homeபிற செய்திகள்கேஎம்சிஹெச் புற்றுநோய் சிகிச்சை மையத்தில் ரோஸ் தின விழா

கேஎம்சிஹெச் புற்றுநோய் சிகிச்சை மையத்தில் ரோஸ் தின விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் உலகத்தரமான அதிநவீன வசதிகளுடன் ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. 2011-ம் ஆண்டு துவக்கப்பட்ட இம்மையம், அன்று முதல் இன்று வரை புற்றுநோயாளிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் தலைசிறந்த அளித்துவருகிறது.

இந்நிலையில் புற்றுநோயாளிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் 2013 ஆம் ஆண்டு முதல் வருடா வருடம் ரோஸ் தினம் கொண்டாடப்படுகிறது.

இதில் புற்றுநோய் பற்றிய தேவையற்ற அச்சவுணர்வைத் தவிர்த்து, நோயாளிகள் நம்பிக்கையுடனும் தைரியத்துடனும் வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த வருட ரோஸ் தினம் ‘புது வாழ்வு’ என்ற கருத்தாக்கத்துடன் கொண்டாடப்பட்டது. இதில் சிகிச்சை வசதிகள் குறித்து விளக்கும் ஒரு வீடியோ படம் திரையிடப்பட்டது.

கேஎம்சிஹெச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி விழாவிற்கு தலைமை வகித்து நிகழ்ச்சியை துவக்கிவைத்தார். பிரபல பேச்சாளர் முனைவர் ஜெயந்திஸ்ரீ பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஊக்குவித்தார்.

முன்னதாக காது, மூக்கு, தொண்டை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மு.திவாகர் வரவேற்புரை வழங்கினார். கதிர்வீச்சு புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆனந்த் நாராயணன் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு உரையாற்றினார். மருந்தியல் புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் ராம்குமார் நன்றிஉரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள், அவர்கள் குடும்பத்தினர், மருத்துவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img