Homeபிற செய்திகள்கால்நடை சுகாதார முகாம் : 1,335 கால்நடைகளுக்கு சிகிச்சை

கால்நடை சுகாதார முகாம் : 1,335 கால்நடைகளுக்கு சிகிச்சை

கிணத்துக்கடவு அடுத்த காரச்சேரியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நடைபெற்ற சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமை கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.


முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை, சினைப்பரிசோதனை, செயற்கை கருவூட்டல், தடுப்பூசி, குடற்புழு நீக்கம் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்பட்டன. மொத்தம் 1,335 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.


சிறந்த 3 கலப்பினக் கிடாரி கன்றுகளுக்கும், 6 முன்னோடி கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கும் பரிசுகளை கலெக்டர் வழங்கினார். விவசாயிகளுக்கு தாது உப்பு கலவைகளும் வழங்கப் பட்டன.

படிக்க வேண்டும்

spot_img