நாமக்கல் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், மூத்த குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
நிகழ்ச்சியில், மூத்த குடிமக்களின் உரிமைகள், சட்டப் பாதுகாப்பு, உடல் மற்றும் மனநலத்தை பேணுவதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.இதில் மாவட்ட சமூக நல அலுவலர் கவுரி தலைமை வகித்தார். சட்டப்பணிகள் ஆணைக்குழு வக்கீல் சரண்யா, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன், டாக்டர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



