கோவை லாலி ரோடு புனித அருளானந்தர் ஆலயத்தின் கிளை சபையான புனித வின்சென்ட் தே பவுல் சபை மற்றும் கோவை அரசு மருத்துவ இணைந்து தவக்கால ரத்த தான முகாம் ஆலய வளாகத்தில் நடைபெற்றது.
முன்னதாக ரத்த தான முகாமை ஆலயத்தின் பங்குதந்தை பால்ராஜ் துவங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில்,அருட் சகோதரிகள் மற்றும் உதவி பங்குத்தந்தை அருட்பணி நவீன் ரோசாரியோ, மற்றும் புனித வின்சென்ட் தே பவுல் சபை தலைவர் ராஜேஷ், உதவி தலைவர் பிரதாப், செயலாளர் சுகுணா மேரி, பொருளாளர் அருள்ராஜ், உதவி செயலாளர் சகாயமுத்து, மற்றும் மூத்த உறுப்பினர்கள் சாமுவேல் ராஜ், ரவி ஆல்பிரெட் ஆகியோர் உடனிருந்தனர். இதில் புனித வின்சென்ட் தே பவுல் சபையின் செயல்பாடுகள் குறித்து அருட்பணி பால்ராஜ் மற்றும் நிர்வாகிகள் கூறுகையில், “கடந்த பல ஆண்டுகளாக இந்த சபையின் வாயிலாக பல்வேறு சமூக நல பணிகளை செய்து வருகிறோம். குறிப்பாக போதிய வருமானம் இல்லாமல் தவிக்கும் சுமார் 30 குடும்பங்களை தத்து எடுத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகிறோம். மேலும், கடந்த ஆண்டு 5 லட்ச ரூபாய் மதிப்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது. தொடர்ந்து தவக்கால ரத்ததான முகாமில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் என ஏராளமானோர் ரத்த தானம் வழங்கினர்” என்றார்



