fbpx
Homeபிற செய்திகள்சட்ட விழிப்புணர்வு முகாம்

சட்ட விழிப்புணர்வு முகாம்

சத்தியமங்கலம் அண்ணாநகர் ஸ்ரீ வெற்றி இன்ஸ்டிட்யூட் ஆஃப் பாராமெடிக்கல், மக்கள் சட்ட விழிப்புணர்வு இயக்கம் இணைந்து நடத்திய சட்ட விழிப்புணர்வு முகாமை முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

இவ்விழாவில் வெற்றி நர்சிங் நிர்வாக இயக்குனர் ஸ்ரீதர், மக்கள் சட்ட விழிப்புணர்வு இயக்கத்தின் தலைவர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வைத்தனர். வின்ஸ்டன் தாஸ், நீதிமன்றங்கள் மற்றும் சட்டங்கள் குறித்து விரிவாக விளக்கி பேசினார். மேலும் மாணவ, மாணவிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.பண்ணாரி, அதிமுக சத்தி நகர செயலாளர் ஒ.எம். சுப்பிரமணியம், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் எஸ். ஆர். செல்வம்,மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் தமிழ்ச்செல்வி, கொமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.சரவணன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img