Homeபிற செய்திகள்சுற்றுச்சூழல், சுகாதாரம், பாதுகாப்பில் கோவை முன்னணியில் உள்ளது

சுற்றுச்சூழல், சுகாதாரம், பாதுகாப்பில் கோவை முன்னணியில் உள்ளது

இந்திய தொழில்துறை கூட்டமைப்பு தென் மண்டலம் (CII-SR) சார்பில் “எம்பவர், எம்ப்ரேஸ், இவால்வ் EHS-ன் சிறப்பு உயர்த்துதல் மாநாடு நடைபெற்றது. இதில் EHS நடைமுறைகள் பற்றிய தொ குப்பு வெளியிடப்பட்டது.

இம்மாநாட்டில் EHS-ன் சிறப்பை மேம்படுத்துதல், EHS சிறப்பை நிறுவுதல், பற்றிய குழு விவாதம் பற்றிய அமர்வுகள் நடைபெற்றன. சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு, ஆற்றல், கார்பன் தடம், நீர் மேலாண்மை, பணியிட சுகாதாரம், சாலைப் பாதுகாப்பு, EHS கண்டுபிடிப்பு ஆகியவற்றில் 208 விருதுகள் அறிவிக்கப்பட்டன.

நிகழ்வில் சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் பா துகாப்பு (EHS) நடைமுறைகளில் கோவை முன்னணியில் உள்ளது என சிஆர்ஐ பம்ப்ஸ் துணைத் தலைவர் ஜி சௌந்தரராஜன் கூறினார். இதில், தெற்கு மண் டலத்தின் தலைவர் மற்றும் சந்திரா டெக்ஸ்டைல் பிரைவேட் லிமிடெடின் நிர்வாக இயக்குநர் டாக்டர் நந்தினி, டான்ஃபோஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் ரவிச்சந்திரன், டொ யோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் சின், மூத்த துணைத் தலைவர் மற்றும் இயக்குனர் சுதீப் டால்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.

படிக்க வேண்டும்

spot_img