தேசிய வழக்கறிஞர் தினத்தைச் சிறப்பிக்கும் வகையில் விருது வழங்கும் விழா கோவை நிர்மலா மகளிர் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.
கல்லூரியும் ஜெய்ஹிந்த் பவுண்டேஷனும் இணைந்து இவ்விழாவினை நடத்தியது.
விழாவில் கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்வினாஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வழக்கறிஞர்களின் சிறந்த பணி குறித்து பேசி வாழ்த்தினார்.
கல்லூரியின் செயலர் அருட்சகோதரி முனைவர் குழந்தை தெரேஸ், முதல்வர் அருட்சகோதரி முனைவர் மேரி ஃபேபியோலா, மூத்த வழக்கறிஞர் தண்டபாணி மற்றும் மூத்த வழக்கறிஞர் செல்வராஜ், ஜெய்ஹிந்த் பவுண்டேஷன் நிறுவனர் வழக்கறிஞர் நந்தகோபால் ஆகியோர் முன்னிலையில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
மூத்த வழக்கறிஞர் திரு தண்டபாணிக்கும் சிபிஐ சிறப்பு முன்னாள் அரசு வழக்கறிஞர் செல் வராஜூக்கும் விருது வழங்கி கௌரவித்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.



