fbpx
Homeபிற செய்திகள்கோவையில் ஒரே நேரத்தில் ஆறு பைக்குகள் அறிமுகம்

கோவையில் ஒரே நேரத்தில் ஆறு பைக்குகள் அறிமுகம்

கோவை ஜெய்கிருஷ்ணா பஜாஜ் சார்பில் அதன் முப்பதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஒரே நேரத்தில் ஆறு புதிய பைக்குகள் அறிமுக விழா டாடாபாத் சத்யநாராயணா ஹாலில் நடைபெற்றது.

விழாவில் ஆல்இந்தியா மோட்டார்சைக்கிள் சேம்பியன் ரஜினிகிருஷ்ணன்,  பஜாஜ் ஆட்டோ லிமிடெட் விற்பனை பிரிவு துணைத்தலைவர் திரு.நரசிம்மன், தமிழ்நாடு மண்டல விற்பனை மேலாளர் ஹனுமத்பிரசாத், தமிழ்நாடு மண்டல சர்வீஸ் மேலாளர் சார்லஸ் ஆகியோர் கலந்துகொண்டு பல்சர் என் மற்றும் என்எஸ் வகையில் ஆறு புதிய பைக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்து  விற்பனையை தொடங்கி வைத்தனர்.

என் மற்றும் என்எஸ் வகை புதிய பல்சர் பைக்குகளின் சிறப்பம்சங்களை  ஜெய்கிருஷ்ணா பஜாஜின் இணை நிர்வாக இயக்குனர் பிரதீப் துரைராஜ் அவர்கள் வாடிக்கையாளர்களுக்கு எடுத்துரைத்தார்.

விழாவில் கலந்துகொண்ட கோவை பகுதியைச் சார்ந்த பல்வேறு ரைடர் குரூப்பினருக்கு நினைவுப் பரிசுகளை தலைமை விருந்தினர் ரஜினிகிருஷ்ணன் வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img