கிருஷ்ணகிரி பாராளுமன்ற தேர்தல் 2024 “தேர்தல் திருவிழா தேசத்தின் பெருமை மாவட்ட ஆட்சியர் வழிகாட்டு அறிவுறுத்தல் உத்திரவுக்கிணங்க 100% சதவீதம் வாக்கு பதிவு- இலக்குநோக்கி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நேற்று (10ம் தேதி) பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் விளையாட்டு போட்டியை துவக்கி வைத்து வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவப்பிரகாசம் தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டது. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வாசுதேவன் வரவேற்றுப் பேசினார்.
வருகின்ற கிருஷ்ணகிரி பாராளுமன்ற தேர்தல் வாக்கு பதிவு 19.04.2024 அன்று நடைபெறுகின்ற தேர்தலில் 100% சதவீதம் வாக்களித்தல் அவசியம் குறித்தும் நமது ஜனநாயக கடமையை ஒவ்வொருவரும் நிறைவேற்றுவோம், அனைவரும் தவறாமல் வாக்க ளிப்போம், பொருத்தமானவரை தேர்ந்தெடுப்போம் போன்ற விழிப்புணர்வு பதாகைகளை கொண்டும் உறுதி மொழிகளயும், கோஷங்களையும் வாசித்தும் விழிப்புணர்வு செய்யப்பட்டது.
மத்தூர் வட்டார வளர்ச்சி துறை அலு வலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட இருபால் ஆசிரியர்கள், மத்தூர் ஊராட்சி செயலாளர் வெங்கடேசன், மக்கள் நலப்பணியாளர் எம்ஜி.ராஜா உள் ளிட்ட பணியாளர்கள், விளையாட்டு வீரர்கள்,மாணவ மாணவிகள் திரளாக பங்கேற்று நிகழ்ச்சிகளை சிறப்பித்தனர்.