கோவை திவ்யா ஹாலில் மறைந்த பொதுக்குழு உறுப்பினர் மற்றும் வழக்கறிஞர் மா.மகுடபதியின் திருஉருவப்பட திறப்பு நிகழ்ச்சி நடந்தது. உருவப்படத்தை திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ்.பாரதி திறந்து வைத்தார்.
நிகழ்வில் திமுக மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்.எல்.ஏ), சட்டத்துறை இணைச் செயலாளர்கள் கே.எம்,தண்டபாணி, பி.ஆர்.அருள்மொழி, மாநகர் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் எஸ்.அன்பு செழியன், கோவை மாநகர் மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் மருது பாண்டியன், துணை அமைப்பாளர்கள் விக்ரம், சலாவுதீன், எலிசபெத் ராணி, மூத்த வழக்கறிஞர்கள் நா.கனகராஜ், ஜி.டி.ராஜேந்திரன், அரசு வழக்கறிஞர்கள் வி.ரவிச்சந்திரன், சிவராமகிருஷ்ணன், கணேசன், சிவக்குமார், கிருஷ்ணமூர்த்தி, கண்ணன், மதிவாணன், நிஜ லிங்கப்பா, ரவிச்சந்திரன், வெங்கடாசலம், சந்திரன் குணசேகரன், ராஜமாணிக்கம், சத்யா, லலிதா, ஜீவா, தோழமைக் கட்சி வழக்கறிஞர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.