நீலகிரி மாவட்டத்தில், தென்மேற்கு பருவ மழையினால் மண்சரிவு ஏற்பட்ட பகுதியினையும், வீடு சேதமடைந்த பகுதிகளையும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நீலகிரி மாவட்டத்தில், தென் மேற்கு பருவ மழையினால் மண்சரிவு ஏற்பட்டு உதகை ஊராட்சி ஒன்றியம், முள்ளிகூர் ஊராட்சி, குட்டி மணி நகர் பகுதியினையும், வீடு சேதமடைந்த நஞ்சநாடு ஊராட்சிக்குட்பட்ட போர்த்தியாடா, மொட்டோரை ஆகிய பகுதிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர் களுக்கு அறிவுறுத்தி, 3 குடும்பங்களுக்கு தனது சொந்த நிதியிலிருந்து தலா ரூ.4,000/- நிவார ணத் தொகையினை வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட் சித்தலைவர் லட்சுமி பவ்யா தண் ணீரு முன்னிலை வகித்தார்.
பின்னர் சுற்றுலாத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு முதல மைச்சர் உத்தரவின்படியும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆலோசனையின் படியும், மாவட்ட நிர்வாகம் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவ மழை தீவிரத்தின் காரணமாக அதிக மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்படுகி றது.
போர்த்தியாடா பகுதியில் மழை யின் காரணமாக சேதமடைந்த வீட்டின் உரிமையாளருக்கு ரூ.8,000 நிவாரணம் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் எனது சொந்த நிதியி லிருந்து 3 நபர்களுக்கு தலா ரூ.4,000 வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த பகுதிகளுக்கு தேவையான தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை மேற் கொள்ள அலுவலர்களுக்கு அறி வுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில், தென் மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், மாவட்டத்தில் 51 வீடுகள் பகுதி சேதமடைந்தும், 3 வீடுகள் முழுமையாக சேதடைந்துள்ளது. 01.06.2024 முதல் தற்போது வரை மழை காரணமாக சேதமடைந்த 54 குடியிருப்புகளுக்கு இழப்பீட்டுத்தொகையாக தலா ரூ.8,000 வீதம் ரூ.4.32 லட்சம் நிவாரணத்தொகை வழங்கப்பட் டுள்ளது.
அதேபோல், கடந்த 4 நாட்களாக நமது மாவட்டத்தில் பெய்த மழை மற்றும் காற்று காரணமாக 19 இடங்களில் மண் சரிவும், 52 மரங்களும் விழுந்துள்ளது.மேலும், நெடுஞ்சாலைத் துறை, வருவாய்த்துறை, தீயணைப்புத் துறை, மின்சார வாரியம் உள்ளிட்ட துறை அலுவலர்கள் போர்க்கால அடிப்ப டையில் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும், 3 மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் ஆகியோர் குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய பகுதிகளில் தயார் நிலையிலிருந்து, மழை மற்றும் காற்றின் காரணமாக சாலையில் விழும் மரங்களை உடனடியாக அப்புறப்படுத்தி, பொதுமக்களுக்கு எவ்வித சிரமமின்றி சீர் செய்து வருகிறார்கள்.
நேற்றைய தினம் இத்தலார் பகுதியில் தடுப்புச்சுவர் இடிந்த பகுதி வருவாய்த்துறையினருடன் இணைந்து ஆய்வு மேற் கொள்ளப்பட்டு, உரிய நட வடிக்கை மேற்கொள்ள அறிவு றுத்தப்பட்டது.
இன்றைய தினம் குட்டிமணி நகர், போர்த்தியாடா, மொட் டோரை ஆகிய மழையினால் பாதிக்கப்பட்ட இடங்கள் ஆய்வு செய்யப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சில் மேற்கொள் ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.இந்த ஆய்வின்போது, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக், உதகை வருவாய் கோட்டாட்சியர் மகராஜ், உதகை ஊராட்சி ஒன்றியத்தலைவர் மாதன், வட்டாட்சியர்கள் சரவணகுமார் (உதகை), கலைச்செல்வி (குந்தா), உதகை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அண்ணாதுரை, சலீம், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ஜார்ஜ் உட்பட பலர் உடனிருந்தனர்.