Homeபிற செய்திகள்காவல் காப்பாளர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி

காவல் காப்பாளர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி

சாலைப் பாதுகாப்புச் சுற்றுக் காவல், தமிழ்நாடு போக்குவரத்துக் காவல் காப்பாளர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி நிகழ்ச்சி நேற்று (19ம் தேதி) பிற்பகல் 2 மணியளவில் கோவை, நிர்மலா மகளிர் கல்லூரியில் கேத்தரின் அரங்கில் நடைபெற்றது.

ரங்கபிரபு (முதன்மை தமிழ்நாடு போக்குவரத்துக் காவல் காப்பாளர்) தலைமை விருந்தினராகப் பங்கேற்று, “சாலைப் பாதுகாப்பு” என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். திரிலோகசுந்தரி, மோகன் ராஜ், நித்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

சாலைப் பாதுகாப்புச் சுற்றுக் காவல் அதிகாரியும் தமிழ்த் துறைத்தலைவருமான முனைவர் மகேஸ்வரி. ப வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகள், உரிமம் மற்றும் விபத்து தடுப்பு ஆகியவற்றின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.

61 சாலைப் பாதுகாப்புச் சுற்றுக் காவல் உறுப்பினர்கள், 3 ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர். கல்லூரியின் செயலர் அருட்சகோதரி முனைவர் குழந்தை தெரேஸ் மற்றும் முதல்வர் அருட்சகோதரி முனைவர் மேரி பபியோலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சி ஏற்பாட்டினைச் சாலைப் பாதுகாப்புச் சுற்றுக் காவல் அதிகாரியும் ஒருங்கிணைப்பாளர்களும் செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img