நாமக்கல் மாவட்டத்தில் ரூ. 6.89 கோடி மதிப்பீட்டில், 9 அரசு பள்ளிகளில் புதியதாக கட்டப்பட்டுள்ள வகுப்ப றைகள் மற்றும் அறிவியல் ஆய்வக கட்டிடங்களை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.
திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி, பாப்பம் பாளையம் அரசு மேல் நிலைப்பள்ளி மற்றும் மின்னக்கல் அரசு உயர் நிலைப்பள்ளிகளில் நபார்டு திட்டத்தின் கீழ் தலா ரூ. 42.72 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள தலா 2 வகுப்பறை கட்டிடங்கள், பெரியபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி, வளையபட்டி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தலா ரூ. 85.44 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள தலா 4 வகுப்பறை கட்டிடங்கள், குமரமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ரூ. 99.42 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள 3 வகுப்பறை கட்டிடம் மற்றும் 1 அறிவியல் ஆய்வக கட்டடம், எஸ்.வாழவந்தி அரசு உயர்நிலைப்பள்ளியில், ரூ. 76.85 லட்சம்
மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள 2 வகுப்பறை கட்டடம் மற்றும் 1 அறிவியல் ஆய்வக கட்டடம், குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் ரூ. 85.44 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள 4 வகுப்பறை கட்டிடங்கள், படைவீடு அரசு உயர்நிலைப்பள்ளியில் ரூ. 1.28 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள 6 வகுப்பறை கட்டிடங்கள் என மொத்தம் ரூ.6.89 கோடி மதிப்பீட்டில் 9 அரசு பள்ளிகளில் புதிய தாக கட்டப்பட்டுள்ள வகுப் பறை கட்டிடங்கள் மற்றும் அறிவியல் ஆய்வகங்களை முதலமைச்சர் ஸ்டாலின், சென்னையில் இருந்து வீடி யோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுகா, வளையபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் முன்னிலையில், நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா குத்து விளக்கேற்றி வைத்து, புதியதாக திறக்கப்பட்ட வகுப்பறைகளை மாணவ, மாணவிகளின் பயன்பாட்டிற்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் ப.மகேஸ்வரி, பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், பெற்றோர் கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.