கௌசிகா நதியை உயிர்ப்பிக்க ரூ.160 கோடி திட்டச் செலவில் ரோட்டரி மாவட்டம் 3201 மாவட்ட ஆளுநர் ரோட்டேரியன் சுந்தரவடிவேலு முன்னெடுப்பில் கௌசிகா நீர் கரங்கள் அமைப்புடன் இணைந்து நில அளவீடு பணி கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி தொடங்கப்பட்டது.
காட்டுப் பண்ணாரி அம்மன் கோவிலிலிருந்து – தேவம்பாளையம் வரை 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு நில அளவீடு பணி முடிந்துள்ளது. மூன்று கட்டங்களாக நில அளவீடும் பணிகள் பிரிக்கப்பட்டு, அதில் முதல் பகுதி வையம்பாளையம் தேவம்பாளையம் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கான விரிவான விவரங்களை ரோட்டரி மாவட்டம் 3201 மாவட்ட ஆளுநர் ரோட்டேரியன் சுந்தரவடிவேலு வெளியிடுகிறார்.
இந்த அறிக்கையின்படி நிதி திரட்டு தல் நடைபெறும். ரோட்டேரியன் கவிதா கோபாலகிருஷ்ணன், இணை ஆளுநர் வரவேற்புரை வழங்கினார். கௌசிகா நீர்க்கரங்களை சேர்ந்த உறுப்பினர்கள் கௌசிகா நதி மற்றும் கௌசிகா நீர்க்கரங்கள் செயல்பாடு கள் பற்றி கண்ணோட்டப் படுத்தினர். மாஸ்கொயர் இன்ஜினியர்ஸ் பிரை வேட் லிமிடெட் நிறுவனத்தின் ரோட் டேரியன் மகேந்திரன் மற்றும் வனிதா மகேந்திரன் ஆகியோர் நில அளவிடும் பணியை மேற்கொண்டனர். மேலும், விரிவான அறிக்கையை ரோட்டரி மாவட்டம் 3201 மாவட்ட ஆளுநர் ரோட்டேரியன் சுந்தரவடிவேலு மற்றும் கௌசிகா நீர் கரங்கள் அமைப்பினரிடம் சமர்ப்பித்தனர்.