fbpx
Homeபிற செய்திகள்தர்மபுரி நகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்

தர்மபுரி நகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்

தர்மபுரி நகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டா டப்பட்டது. விழாவுக்கு நகராட்சித் தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமை தாங்கினார். துணைத் தலைவர் நித்யா அன்பழகன், நகராட்சி ஆணையாளர் சேகர், நகராட்சி பொறியாளர் புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர் நகராட்சி அலுவலர்கள், கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங் கப்பட்டது. தொடர்ந்து நகராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள் மற்றும் பணி யாளர்களுக்கு பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசு வழங் கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நகர் நல அலுவலர் லட்சியவர்ணா, சுகாதார அலுவலர் ராஜரத்தினம், துப்புரவு ஆய்வாளர்கள் ரமணசரண், சுசீந்திரன், நகர அமைப்பு அலுவலர் ஜெயவர்மன் மற்றும் நகராட்சி அலுவலர்கள், நகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img