Homeபிற செய்திகள்கேபிஆர் பொறியியல் கல்லூரியில் ஆய்வகம் திறப்பு

கேபிஆர் பொறியியல் கல்லூரியில் ஆய்வகம் திறப்பு

கோவை கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இயந்திர மின்னணுவியல் துறைக்காக ரூ.3.7 கோடி செலவில் அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய கலப்பின மற்றும் மின்சார வாகனங்களுக்கான சிறப்பு ஆய்வகம் திறக்கப்பட்டது.

இந்த திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மஹிந்திரா நிறுவனத்தின் துணைத்தலைவர் முனைவர் சங்கர் வேணு கோபால், முதன்மை பொறியாளர் முனைவர் சரவணன், ஓசோடெக் ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் பரதன் குப்புசாமி மற்றும் ஜெயம் ஆட்டோ மோட்டிவ்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் சசிகுமார் அய்யாசாமி ஆகியோர் பங்கேற்று குத்து விளக்கேற்றித் திறந்து வைத்து மாணவர்களிடம் ஆய்வகம் பற்றிக் கலந்துரையாடினர்.

இதில் ஆராய்ச்சிப் பணிகள் செய் வதற்கு ஏதுவாக எட்டி கரண்ட் டைனமோ மீட்டர் பொருத்தப்பட்ட கணினி மயமாக்கப்பட்ட ஹைப்ரிட் எஞ்சின் டெஸ்ட்ரிக், 11 பணி நிலையங்கள், உரிமம் பெற்ற
மென்பொருள் மற்றும் பல்வேறு தொழில் நுட்பங்களைக் கொண்டுள்ளது.

தொடர்ந்து மொபிலிட்டி எக்ஸ் 1.0’ என்ற தொழில் வல்லுநர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img