சட்டமன்ற தொகுதி வரும் விளையாட்டு அரங்குகள் அமைக்க வேண்டும் என ஈரோடு சக்தி நகர் ஸ்போர்ட்ஸ் மற்றும் வெல்ஃபேர் டிரஸ்ட் பொருளாளர் கைலாசபதி கேட்டுக்கொண்டார். வீட்டு வசதித் துறை அமைச்சர் முத் துசாமி ரூபாய் 35 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட உள்விளையாட்டு அரங்கத்தை இன்று சக்தி நகரில் திறந்து வைத்தார்.
இதில் ஷட்டில் காக் டேபிள் டென்னிஸ் கபடி போன்ற விளையாட்டு வசதி உள்ளது. கைலாசபதி கிராமப்புறங்களில் இதே போன்று உள் விளையாட்டு அரங்கு அமைக்க வேண்டும். அப்போதுதான் கிராமப்புற இளைஞர்கள் விளையாட்டில் அதிக ஆர்வம் செலுத்துவார்கள்.
நாடு பல விளையாட்டு வீரர்களை உருவாக்கும் என்றார். இதற்கு அமைச்சர் பதிலளிக்கையில் ஈரோடு சி என் கல்லூரி மற்றும் சோலாரில் பெரிய அளவில் உள் விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்பட உள்ளன என்றார்.
இந்நிகழ்ச்சியில் டிரஸ்ட் நிர்வாகிகள் டி எஸ் குமாரசாமி எம்பி ஆறுமுகம் எஸ் சச்சிதானந்தன் என் எஸ் பாபு எஸ்கே கார்த்திக் குமார் மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.