சீரற்ற இதயத்துடிப்பு தொடர்பான கருத்தரங்கு கோவை கேஎம் சிஎச் மருத்துவமனையில் நேற்று நடைபெற்றது. 9ம் ஆண்டு கோவை ஹார்ட் ரிதம் (இபி அப்டேட் 2024) என்ற இந்த கருத்தரங்கை இம்மருத்துவமனையின் செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி துவக்கி வைத்தார். இதயத்துடிப்பு சிகிச்சையில் புதிய முன்னேற்றங்கள் குறித்து இக்கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.
இதில், கேஎம்சிஎச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி, கருத்தரங்கு ஏற்பாட்டு செயலாளர் டாக்டர் லாரன்ஸ் ஜேசு ராஜ் மற்றும் 50க்கும் மேற்பட்ட நிபுணர்களும், 200க்கும் மேற்பட்ட மருத்துவர்களும் கலந்து கொண்டனர்.
கிரையோஅப்லேஷன் என்ற அதிநவீன தொழில் நுட்பத்தை தமிழ்நாட்டில் முதன்முதலாக அறிமு கப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் சீரற்ற இதயத்துடிப்பு நோய்க்கென்ற ஒரு பிரத்யேக சிகிச்சை மையத்தையும் துவக்கிய பெருமை கேஎம்சிஹெச் மருத்துவமனையைச்சாரும் என்று கருத்தரங்கு ஏற்பாட்டு செயலாளர் டாக்டர் லாரன்ஸ் ஜேசுராஜ் தெரிவித்தார்.
இக்கருத்தரங்கில் மருத்துவமனையின் செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி, கேஎம்சிஹெச் மருத் துவமனையின் தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி உள்ளிட்டோர் பேசினர்.