முன்னணி மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனையான கேஎம்சிஹெச் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் சிவகுமாரன் ஜானகிராமன் ஃப்ளக்ஸ் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றுள்ளார்.
டாக்டர் சிவகுமாரன் மருத்துவத் துறைக்கு ஆற்றிவரும் சிறந்த பங்களிப்புகள் மற்றும் மாற்றத்தை ஏற்படுத்தும் தாக்கத்திற்காக இந்த மதிப்புமிக்க உலகளாவிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருது ஹாங்காங்கில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் வழங்கப்பட்டது. ஃப்ளக்ஸ் ஈவென்ட்ஸ் என்பது, தங்கள் துறைகளில் தனிச்சிறப்பான அர்ப்பணிப்பு, புதுமை மற்றும் தலைமைத்திறனை வெளிப்படுத்தும் ஆளுமைகளை அங்கீகரிப்பதில் கவனம் செலுத்தும் ஒரு உலகளாவிய தளமாகும்.
70க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 5000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், இந்த மதிப்புமிக்க விருதைப் பெற்ற இரண்டாவது இந்தியர் டாக்டர் சிவகுமாரன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஃபார்ச்சுனா உலகளாவிய சிறப்பு விருதையும் அவர் பெற்றுள்ளார். இந்த கௌரவத்தைப் பெற்ற முதல் மற்றும் ஒரே இந்திய முதன்மை செயல் அதிகாரி ஆவார்.
“டாக்டர் சிவகுமாரன் இந்த மதிப்பு மிக்க உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றிருப்பதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்,” என்று கேஎம்சிஹெச் தலைவர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி கூறினார். தொடர்ந்து கேஎம்சிஹெச் செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமியும் டாக்டர் சிவகுமாரனுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.



