fbpx
Homeபிற செய்திகள்கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் கிராமப்புற மக்கள் ஆரோக்கியம்: சர்வதேச கருத்தரங்கு

கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் கிராமப்புற மக்கள் ஆரோக்கியம்: சர்வதேச கருத்தரங்கு

இந்திய கிராமப்புறங்களில் தொற்றாத நோய்கள் உருவாக்கும் சவால்களும் அவற்றைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகளும் என்ற தலைப்பில் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் 2 நாள்கள் சர்வ தேச கருத்தரங்கு ஜூன் 23, 24-ம் தேதிகளில் நடைபெறுகிறது.

இதில் உலகின் பல நாடுகளில் இருந்தும் மருத்துவர்கள், ஆராய்ச்சி யாளர்கள், கொள்கை வகுப்போர், சமூக தலைவர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டு பல புதிய உத்திகள் பற்றி விவாதித்தனர். தங்களுடைய அனுபவத்தை பகிர்ந்துகொண்டனர்.

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத் துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் டாக்டர் கே. நாராயணசாமி மற்றும் தமிழ்நாடு மாநில திட்டக் குழு உறுப்பினர் பேராசிரியர் டாக்டர் ஜே. அம லோற்பவநாதன் முன்னிலை வகித்தனர்.

கருத்தரங்கு

கேஎம்சிஹெச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி, துணை தலைவர் டாக்டர் தவமணி பழனிசாமி, செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி, கே.எம்.சி.ஹெச் ரிசர்ச் பவுண்டேசன் தலைவர் டாக்டர் அருள்ராஜ் ராமகிருஷ்ணன் ஆகியோர் கருத்தரங்கு நிகழ்வில் கலந்துகொண்டனர்.

துவக்கவுரை நிகழ்த்திய பேராசிரியர் டாக்டர் கே. நாராயணசாமி தொற்றாத நோய்களில் ஒன்றாக கல்லீரல் நோய் அதிகரித்துவருவதை சுட்டிக் காட்டினார்.
தொற்றாத நோய்கள் மற்றும் கல்லீரல் நோய் தொடர்பாக கிராமப்புற பகுதிகளில் கேஎம்சிஹெச் ஆராய்ச்சி அறக்கட்டளை மேற் கொண்டுவரும் பணிகளை அவர் பாராட்டினார்.

இதுபோன்ற கருத்தரங்குகள் இத்துறையில் உயர்தர ஆராய்ச்சி களுக்கு வழிவகுக்கும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
கவுரவ விருந்தினராக கலந்து கொண்ட பேராசிரியர் டாக்டர் அமலோற்பவநாதன் தொற்றாத நோய்களைக் கண்டறிய தமிழக அரசும் திட்டக்குழு எடுத்துவ ரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.

ஆரோக்கியம் குறித்த பல்வேறு செயல்பாடுகளில் தமிழ்நாடு முன்னோடியாக இருக்கும் போதிலும் தொற்றா நோய்களைப் பொறுத்தவரை அரசும் பொதுமக்களும் இணைந்து தீவிர முயற்சிகளை எடுப்பது அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.

கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி கூறுகையில் இருதய நோய், கல்லீரல் நோய், நீரிழிவு, புற்றுநோய், மூச்சுக்குழாய் நோய் முதலான தொற்றாத நோய்கள் கிராமப்புறங்களில் வசிக்கும் மக் களுக்கு அதிகம் இல்லை என்ற கருத்து இருந்தது.

ஆனால் அந்த நிலை தற்போது மாறியுள்ளது. கிராமப்புற மக்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் கிடைப்பதை உறுதி செய்திட பிரத்யேக கவனம் தேவைப்படுகிறது.

வெளிநாட்டில் உள்ள ஃபிராமிங்ஹாம் மாடலைப் போல இந்திய மக்களுக்கான தொற்று நோய் குறித்த தகவல்களை சேகரிப்பதிலும் உருவாக்குவதிலும் கே.எம்.சி.ஹெச் ஆராய்ச்சிக் கட்டளை முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

படிக்க வேண்டும்

spot_img