fbpx
Homeபிற செய்திகள்தேசிய அளவில் கேஎம்சிஹெச்  மருத்துவமனை 7வது முறையாக சாதனை

தேசிய அளவில் கேஎம்சிஹெச்  மருத்துவமனை 7வது முறையாக சாதனை

இந்திய மருத்துவமனைகளில் செயல்திறனை ஆராய்ந்து அதனடிப்படையில் பிரபல ஆங்கில பத்திரிகையான தி வீக் வருடாவருடம் சர்வே நடத்தி வருகிறது. இதன் சமீபத்திய ஆய்வறிக்கையின்படி கேஎம்சிஹெச் மருத்துவமனை இந்த வருடத்திற்கான கோவையின் நெ.1 பல்துறை மருத்துவமனையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து ஏழாவது ஆண்டாக கேஎம்சிஹெச் இந்த அங்கீகாரம் பெற்றுள்ளது. கடுமையான போட்டிகளுக்கிடையே இந்த விருதையும் அங்கீகாரத்தையும் தொடர்ந்து பெற்றுவருவது தனிச்சிறப்பு வாய்ந்ததாகும்.

தி வீக் பத்திரிகை சார்பில் ஹைதராபாத் நகரில் நடைபெற்ற விழாவில் கோவையின் சிறந்த பல்துறை மருத்துவமனை 2024 என்ற பெருமைமிகு விருதைப் தெலுங்கானா மாநிலத்தின் சுகாதாரம், மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை  அமைச்சர் ஸ்ரீ தாமோதர் ராஜா நரசிம்மா  கேஎம்சிஹெச்  மருத்துவமனையின் தர கட்டுப்பாட்டு அதிகாரி முத்துசாமியிடம் வழங்கினார்.

கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்று, என்றும் நம்பிக்கைக்குரிய மருத்துவமனையாக திகழ்வதையே இந்த விருது சுட்டிக் காட்டுகிறது என்று கேஎம்சிஹெச் மருத்துவமனை தலைவரும் நிர்வாக இயக்குனருமாகிய டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img