Homeபிற செய்திகள்முதலமைச்சர் கோப்பை விளையாட்டில்கிக்கானி பள்ளி முன்னாள் மாணவர்கள் வெற்றி

முதலமைச்சர் கோப்பை விளையாட்டில்கிக்கானி பள்ளி முன்னாள் மாணவர்கள் வெற்றி

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் சார்பில் மாவட்ட அள விலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் -2025 நிறைவு பெற்று கோவை நேருவிளையாட்டு அரங்கில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு பொதுப்பிரிவு கால்பந்து ஆடவர் மற்றும் பெண்கள் என இரண்டு பிரிவிலும் வெற்றி பெற்ற கிக்கானி பள்ளி முன்னாள் மாணவ மாணவிகளுக்கு, பதக்கங்கள் வழங்கிகோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் வாழ்த்து தெரிவித்தார்.


நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர், கோவை மாநகராட்சி மேயர் ரங்க நாயகி ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள், மாநகராட்சி அலுவலர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜ்குமார் மற்றும் கால்பந்து பயிற்றுனர் ஜேம்ஸ் கென்னடி உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img