கடலூர் மாவட்டம் பண்ருட்டி மலட்டாற்றின் குறுக்கே திரு வாமூர்-சோமாசிப்பாளையம் சாலையில் இணைப்பு உயர்மட்ட பாலம் நபார்டு நிதியின் கீழ் ரூ.8.13 கோடி மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் நடைபெறுவதை நிறைந்தது மனம் திட்டத்தில் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார். ஆய்வின்போது கலெக்டர் தெரிவித்ததாவது:- பண்ருட்டி வட்டத்திற் குட்பட்ட திருவாமூர்-சோமாசிப்பாளையம் இணைப்புச்சாலை மலட்டாற்றின் குறுக்கே தரைப்பாலமாக இருந்தது.
மழைக்காலங்களில் இத்தரைப்பாலம் சேதம டைவதால் பண்ருட்டி நகரத்திலிருந்து சோமாட்சிப்பாளையம், திடீர்குப்பம், சேந்தநாடு, காமாட்சிப்பேட்டை மற்றும் விசூர் ஆகிய கிராமங்களுக்கான பொதுப் போக்குவரத்து துண்டிக்கப்படுகின்றன.
மேலும், தரைப் பாலத்திற்கு மேல்மழைநீர் செல்வதால் பொதுமக்கள் ஆற்றை கடப்பது தடைப்படும். இதனால் இக்கிராமங்களை சேர்ந்த சுமார் 1000 குடும் பங்களுக்கு போக்குவரத்து பாதிப்படைவதுடன், 400 ஏக்கர் முந்திரி, நெல் உள்ளிட்ட விவசாய நிலங்களில் இருந்து விவசாயப் பொருட்கள் வெளியிடங்களுக்கு கொண்டு செல்ல முடியாமல் பாதிப்படைகின்றன. தற்போது பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று திருவாமூர்-சோமாசிப் பாளையம் இடையே நபார்டு நிதியின் கீழ் ரூ.8.13 கோடி மதிப்பீட்டில் 93 மீட்டர் நீளத்தில் 8.40 செ.மீ அகலத்தில் பாதுகாப்புச்சுவர் மற்றும் தடுப்புச்சுவருடன் கூடிய உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த இணைப்பு பாலம் அமைக்கப்படுவதால் மழைக்காலங்களில் பொதுபோக்குவரத்திற்கு எவ்வித இடை யூரின்றி இப்பகுதி பொதுமக்கள், பள்ளி மாண வர்கள் நகரப் பகுதிக்கு சுலபமாக வந்து செல்லவும், விவசாயிகள் தங்கள் விளைப் பொருட்களை வெளியிடங்களுக்கு கொண்டு சென்று விற்பனை மேற்கொள்ளவும் வழிவகை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிறைந்தது மனம் திட்டத்தில் பயனடைந்த விவசாயி பழனிவேல் தெரிவிக்கையில், நான் திருவாமூர் பகுதியில் வசித்து வருகிறேன். நான் எனது விவசாய நிலத்திற்கு செல்ல மலட்டாற்றின் தரைப்பாலத்தை கடந்து செல்ல வேண்டும். முன்பிருந்ததரை பாலம் மழைக்காலத்தில் சேதம் ஏற்படுவதால் எனது நிலத்திற்கே செல்ல முடியாமலும், விளைச்சல் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாமலும் தவித்து வந்தேன்.மழைக்காலத்தில் திருவாமூரிலிருந்து சோமாசிப்பாளையம் செல்ல சுமார் 5 கி.மீ தூரம் சுற்றிவரும் சூழ் நிலை இருந்தது. ஆனால் இப்பொழுது அரசு மூலம் திரு வஙமூர்-சோமாசிப் பாளையம் இடையே உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு வருகிறது.
இப்பாலம் அமைவதால் மழைக்காலங்களில் எனது நிலத்திற்கு செல்லவும், விளைப்பொருள்களை எந்த நேரத்திலும் எப்பொ ழுது வேண்டுமா னாலும் கொண்டு சென்று விற் பனை செய்ய முடியும்.இதற்கு வழிவகை ஏற்படுத் திக்கொடுத்த தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு எனது சார்பாகவும்,எனது பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சார்பாகவும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.



