முன்னணி பிரீமியம் கார் தயாரிப்பு நிறுவமான கியா, இந்தியாவில் தனது இரண்டாவது சிறந்த கண்டுபிடிப்பான தி நியூ சோனெட்டின் புதிய அவதாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதிக தசை மற்றும் ஸ்போர்டியர் சோனெட் நவீன தம்பதிகள், தொழில்நுட்ப ஆர்வலர்கள், ஒரே இடத்தில் மொபிலிட்டி தீர்வைத் தேடும் நிபுணர்களை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஏடிஏஎஸ் (ADAS)-ஐ 10 ஆட்டோனமஸ் அம்சங்களுடன் பேக் செய்கிறது.
இதில் முன்பக்க மோதல் தவிர்ப்பு உதவி (FCA), முன் வாகனம் புறப்படும் எச் சரிக்கை (LVDA), லேன் ஃபாலோயிங் அசிஸ்ட் (LFA) ஆகியவை அடங்கும். வலு வான 15 ஹை-பாதுகாப்பு அம்சங்கள் உள்பட, 25க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங் களை சோனெட் கொண்டுள்ளது.
அத்துடன், கியா ஒரு புதுமையான வெகுமதி அடிப்படையிலான ஓட்டுநர் முன் முயற்சியை அறிமுகப்படுத்துகிறது, கே.ஐ.டி., தொழில்நுட்பமான ‘கியா கனெக்ட்’ ஆப் மூலம் உரிமையாளர்களின் டிரைவிங் நடத்தையை மதிப்பீடு செய்கிறது.
அதாவது சீட் பெல்ட் பயன்படுத்துதல், திடீரென பிரேக் போடுதல், வேகக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றுதல் உள்ளிட்ட திறன் மதிப்பீடுகளை வழங்குகிறது. நியூ சோனெட் தற்போது 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படுகிறது.
சோனட் 3.68 லட்சம் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளதாக கியா இந்தியாவின் நிர்வாக இயக்குநரும் சிஇஓ-வுமான டேஜின் பார்க் தெரிவித் துள்ளார்.



