fbpx
Homeபிற செய்திகள்ஒரு தொண்டு நிறுவனத்தின் ‘அழகான சேவை’

ஒரு தொண்டு நிறுவனத்தின் ‘அழகான சேவை’

ஈரோட்டைச் சேர்ந்த இளஞ்சி (என்ஜிஓ) அறக்கட்டளையானது பல்வேறு சமூகப் பிரச்சினைகளில், குறிப்பாக பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பெரும் பணியைச் செய்து வருகிறது.

அதன் சமீபத்திய சேவை, ஈரோடு எஸ்பி அலுவலகத்தின் வளாகச் சுவர்களில், (பிஎஸ் பூங்கா அருகே உள்ள நகரின் மையப்பகுதியில்), பெண் கல்வி, ஹெல்மெட் அணிதல், பிளாஸ்டிக், இ-கழிவுகள், மருத்துவக் கழிவுகள் ஒழிப்பு பிளாஸ்டிக் பைக்கு பதில் மஞ்சள் துணி பை பயன்படுத்துதல், பெண் குழந்தையைப் பாதுகாத் தல், பெண்களுக்கு எதிரான குற்றங்களை எதிர்ப்பது, நடக்கும்போது செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் தீய விளைவுகள், பெண்களிடையே நம்பிக்கையை உறுதி செய்தல் போன்ற அழகிய ஓவியங்களை வரைந்தது.

அறக்கட்டளை தலைவர் ஜானகி கூறுகையில், ‘’இங்கு மட்டுமின்றி ஈரோடு, அசோ கபுரத்தில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பு களின் சுற்றுச் சுவர்களிலும இதே போன்ற ஓவியங்களை அறக்கட்டளை வரைந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன், வீட்டு வசதித்துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி, இப்பணியை துவக்கி வைத்தார். அதிர்ஷ்டவசமாக, ஈரோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி எஸ்பி அலுவலகத்திற்கு எதிரே அமைந்துள்ளது. அதனால், ஆயிரக்கணக்கான மாணவர்களும், மக்களும் அதில் உள்ள ஓவியங்களையும், விழிப்புணர்வு செய்திகளையும் கவனிப்பார்கள்.

இது பொதுமக்களின் மனதில் சில தாக்கத்தை ஏற்படுத்தும்,’’ என நம்பிக்கை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகிறார், “சென்னை, கோயம்புத்தூர் போன்ற பெருநகரங்களில், பல பகுதிகளில் இதே போன்ற ஓவியங்கள் காணப்படுகின்றன. அவற்றில் சில ழிநிளி க்களால் நிதியுதவி செய்யப்பட்டன, சில அரசு நிறுவனங்களால் நிதியளிக்கப்பட்டன.

“ஆனால், ஈரோடு போன்ற சிறிய நகரங்களில், மிகச் சில அரசு சாரா நிறுவனங்கள் சில சுவர்களில் சில ஓவியங்களை ஸ்பான்சர் செய்கின்றன. எனவே, சம்பந்தப்பட்ட
அரசு அலுவலகங்கள் தாங்களாகவே அவற்றின் வளாகச் சுவர்கள், பாலங்கள், பொது இடங்கள், பூங்காக்கள் போன்றவற்றில் சில ஓவியங்களை வரைந்து சில நல்ல செய்திகள், திட்டங்கள், சட்டங்கள் போன்றவற்றை பொதுமக்களுக்கு தெரியப் படுத்தலாம்.

கட்டிடங்களின் பராமரிப்பு நிதியில் இதைச் செய்யலாம். சுவரொட்டிகள் ஒட்டுதல், வாசகங்கள் எழுதுதல் போன்றவற்றின் மூலம் சுவர்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், ஊடகங்கள் மூலம் செய்யப்படும் விளம்பரங்களில் கோடிக்கணக்கான ரூபாய்களை மிச்சப்படுத்தவும் இது உதவும்.

தேவைப்பட்டால், தொழில், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் தங்கள் பெயர்களை ஓவியங்களின் கீழ் எழுத அனுமதித்து இப்பணியை செய்யுமாறு கேட்டுக் கொள்ளலாம்,’ என்றார்.

படிக்க வேண்டும்

spot_img