குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை ஐ.ஜி. காமினி உத்தரவின் படி போலீசார் ரேஷன் அரிசி கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவை மண்டல எஸ்பி பாலாஜி கோவையில் ரயில்கள் மூலம் அரிசி கடத்தும் நபர்களை பிடிக்க உத்தரவிட்டார். இதையடுத்து பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் அறிவுறுத்தலின் பேரில் போலீசார் கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் சோதனை செய்தனர்.
அப்போது நடைமேடை 3-ல் கேரளாவிற்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டு இருந்த 300 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை கைப்பற்றினர். இது தொடர்பாக கோவை சித்தாபுதூரை சேர்ந்த அமுதா (40), கேரள மாநிலம் வேலாந்தாவளத்தை சேர்ந்த ஜோதி (62) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.



