கோவை மாவட்ட வருவாய் அலகில் வட்டாட்சியர்கள் நிர்வாக நலன் கருதி மாவட்டத்திற்குள் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை ஆட்சியர் கிராந்திகுமார் பாடி பிறபித்துள்ளார்.
அதன்படி வால்பாறை வருவாய் வட்டாட்சியர் ஜோதிபாசு, பேரூர் சமூகப்பாதுகாப்பு திட்டம் தனி வட்டாட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர், சிறப்பு நில எடுப்பு அலகு, சிவக்குமார், ஆட்சியர் அலுவலக வரவேற்பு பிரிவு தனி வட்டாட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மாவட்ட வழங்கல் பிரிவு தாராபாய் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராக, சிறப்பு நில எடுப்பு அலகிற்கு மாற்றப்பட்டுள்ளார். வால்பாறை சமூக
பாதுகாப்பு திட்டம் தனி வட்டாட்சியர் அருள் முருகன், வால்பாறை வருவாய் வட்டாட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.