கோவை கதிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் கதிர் கல்விக் குழுமத்தின் தலைவர் ஈ.எஸ்.கதிர், செயலர் லாவண்யா கதிர் ஆகியோர் கலந்து கொண்டு தலைமையேற்று துறைத் தலைவர்களுக்கும், பேராசிர்களுக்கும் மலர் கொத்து கொடுத்து வாழ்த்துக் களைத் தெரிவித்தார்கள்.
அதனைத் தொடர்ந்து கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஆர்.கற்பகம் வாழ்த் துரை வழங்கினார் அப்போது அவர் பேசியதாவது: ஆசிரியர் தினம் என்பது டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் நினைவாக கொண்டாடப்படும் நிகழ்வாகும்.
இந்நிகழ்வில் ஆசிரியர்கள் அனைவரும் பெருமிதத்தோடும், தன்முனைப்போடும், சமூக அக்கறையோடு செயல்பட வேண்டும் என்பதையே நமக்குக் உணர்த்துகிறது.
அதே சமயம் “ஆசிரியர் பணியே ஓர் அறப்பணி. அதற்கே உன்னை அர்ப்பணி” என்னும் பொன்மொழிக்கு ஏற்ப மாணவர்க ளின் வளர்ச்சிக்கும், நலனுக்கும், உழைக்கும் உன்னதமானவர்களே ஆசிரியர்கள். அதே சமயத்தில் மாணவர்களின் எண்ணங்களுக்கு ஏணியாக இருக்க வேண்டும்.
அதே போல் “வானத்தை நோக்கி வீசும் ஏணியாக நாம் இருந்தால் போதும் அதில் ஏறிச்சென்று வானத்து நட்சத்திரங்களையும் பறித்து விடுவார்கள் மாணவர்கள்” ஆசிரியர்க ளான நாம் எப்போதும் சமுதாயம் பயனுறும் வண்ணமும், மாணவர்கள் பயனுறும் வண்ணமும் செயல்பட வேண்டும் என்று உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து ஆசிரியர் களுக்கு பல்வேறு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், குறும்பட திரையிடல்கள் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



