கரூரில் “நமக்கு நாமே” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியரிடம் டெக்ஸ் டைல் ஏற்றுமதி நிறுவன உரிமையாளர்கள் ரூ.30 லட்சம் நிதி உதவி வழங்கினர்.
கரூரில் பிரபலமாக செயல்பட்டு வரும் ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள் சார்பில், அந்த நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து கரூர் ஜவுளி பூங்கா தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து தலைமையில், ஜவுளி ஏற்றுமதி நிறுவன உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கரை நேரில் சந்தித்தனர்.
அப்போது “நமக்கு நாமே” திட்டத்தின் கீழ் தலா 10 லட்சம் வீதம் 30 லட்சம் நிதி உதவி வழங்கினர். நிதி உதவிக்கான காசோலையை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அரசின் திட்டத்திற்கு நிதி உதவி வழங்கிய தொழிலதிபர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
இதில் ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு அரசு பணி திட்டத்திற்காக இந்த நிதியை வழங்கி உள்ளார்கள். அதன் அடிப்படையில்,
அட்லஸ் டெக்டைல்ஸ் நிறுவனம் க.பரமத்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ரூ 10 லட்சமும், ஏசியன் பேப்ரிக்ஸ் நிறுவனம் ஓலப்பாளையம் அரசு மருத்துவமனை கட்டுமான பணிக்கு ரூ 10 லட்சமும், சிந்தசிஸ் நிறுவனம் கரூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 10 படுக்கைகளும், நான்கு கழிவறைகள் கட்டுவதற்கு ரூ.10 லட்சமும் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.
இந்த நிதியில் ஒவ்வொரு திட்டத்திற்கும் வழங்கிய தொகைக்கு இருமடங்காக அரசு சார்பாக நிதி உதவி வழங்கப்படும். அதன் அடிப்படையில் அரசு 60- லட்சம் ஒதுக்கீடு செய்யும். மொத்தம் 90 லட்சத்தில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.