தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் பயணியர் நிழற்குடை ஒரு குறிப்பிட்ட பகுதியில் அமைக்காத காரணத்தால் அப்பகுதியில் அதிக நேரம் காத்திருந்து பேருந்தில் பயணம் மேற்கொள்ளும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள், பூக்கடை வியாபாரிகள் உள்ளிட்டோர் வெயில் மற்றும் மழைக்கு ஒதுங்க இடமின்றி அவதியுறும் நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தருமபுரி நகர பேருந்து நிலை யத்தில் தருமபுரி சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் தனது தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்தார்.
பூமி பூஜை
இதனையடுத்து பயணியர் நிழற்குடை அமைக்கும் பணியை பூமி பூஜை செய்து சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், தருமபுரி நகராட்சி ஆணையாளர் சித்ரா, தருமபுரி நகர்மன்ற தலைவர் லட்சுமி, நகராட்சி பொறியாளர் ஜெயசீலன், பாமக துணைத்தலைவர் பி.சாந்தமூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் பெ.பெரியசாமி, மாவட்ட பொறுப்பாளர் இ.மா.பாலகிருஷ்ணன், மாவட்ட தேர்தல் பணிக்குழு தலைவர் வாசுநாயுடு, மாவட்ட அன்புமணி தம்பிகள் படை செயலாளர் ர.கார்த்திகேயன், நகர செயலாளர்கள் கி.வெங்க டேசன், வே.சத்தியமூர்த்தி, அதிமுக நகர கழக செயலாளர் பூக்கடை ரவி, முன்னாள் மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் தகடூர்தமிழன், நகர்மன்ற உறுப்பினர்கள் ஜெகன், செந்தில்வேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எழில் பச்சியப்பன், வெங்கடாசலம், ஆர்.எம்.சக்தி, வேல்முருகன், ஜெயராமன், முனியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.