கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அறிவுறுத்தலின்பேரில், மாநகர ஆயுதப்படையினரின் கவாத்து பயிற்சி இன்று நடந்தது.
கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நடந்த இந்த பயிற்சியின் போது, 2 கிலோ மீட்டர் ஓடுதல், லத்தியை கையாளும் முறை, துப்பாக்கி ஏந்தி நடப்பது உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
போலீசார் அளித்த மரியாதையை உதவி ஆணையர் ஏ.சேகர் ஏற்றுக் கொண்டார். கவாத்து பயிற்சியில் ஆயுதப்படை ஆய்வாளர் பிரதாப் சிங் தலைமையில் 80 பெண் காவலர்கள், 140 ஆண் காவலர்களும் பங்கேற்றனர்.