கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அஜித் என்பவர் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வந் தார்.
கடந்த மார்ச் மாதம் நடந்த சாலை விபத்தில் காவலர் அஜித் உயிரிழந்தார்.
இவர் 2017ஆம் ஆண்டு பேட்ஜ் ஐ சேர்ந்தவர் ஆவார். இவருக்கு “காக்கும் உறவுகள்” என்ற அமைப்பின் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள 36 மாவட்டங்களிலும் 2017 பேட்ஜ்-ல் இணைந்த 5,324 காவலர்கள் நிதி உதவி அளித்தனர்.
அந்த நிதி உதவி ரூபாய் 16 லட்சத்து 27 ஆயிரத்து 439 ஆகும். இந்த தொகையை நேற்று கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம், விபத் தில் உயிரிழந்த காவலர் அஜித்தின் குடும்பத்தினருக்கு வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.
மேலும் ,2017 பேட்ஜ் காவலர்களின் இந்த முயற்சியினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.



