கோவை, கேஎம்சிஹெச், மருத்துவமனையில் நுரையீரல் நோய்களுக்கு அனைத்து வசதிகளுடன் ஒரே இடத்தில் சிகிச்சைகள் அளிக்கும் நவீன வசதிகளுடன் கூடிய பிரத்யேக நுரையீரல் சிகிச்சை மையமான லங் இன்ஸ்டிடியூட் (Lung Institute) தொடக்க விழா மற்றும் 2 நாள் தேசிய கருத்தரங்கம் நடந்தது.
10,000 சதுர அடி பரப்பளவில் அமைந்திருக்கும் இம்மையத்தில் நுரையீரல் நோய்கள், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மையம் மற்றும் உள்நோக்கு நுரையீரல் மருத்துவ மையம் ஆகிய இரு சிறப்பு பிரிவுகள் உள்ளன.
நுரையீரல் சிகிச்சை நிபுணர் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர் ஆர். எம்.பி.எல்.ராமநாதன், நுரையீரல் சிகிச்சை நிபு ணர்கள் டாக்டர் எஸ். சாந்தகுமார், டாக்டர் ஜே.வேணுகோபால், டாக்டர் தீபக் ஆகியோர் நுரையீரல் மருத்துவக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இங்கிலாந்து நாட்டு மருத்துவர் ஜேம்ஸ் டி சாமர்ஸ், சண்டிகரில் நுரையீரல் மருத்துவ துறையில் பணியாற்றும் டாக்டர் எஸ்.கே. ஜிண்டால் ஆகியோர் முதன்மை விருந்தினராகவும், சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டு புதிய நுரையீரல் மையத்தை துவக்கி வைத்தனர்
அதைத் தொடர்ந்து, எம்பார்க் (EMBARC) இந்தியா என்ற அமைப் புடன் இணைந்து புரோன்சிக்டாசிஸ் என்ற தலைப்பில் இரு நாள் கருத்தரங்கம் ஏப்ரல் 22, 23ம் தேதிகளில் நடைபெற்றது.
முன்னேற்றங்கள்
இதில் இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் பல்வேறு மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று, நுரையீரல் மருத்துவத்தில் ஏற்பட்டு வரும் நவீன முன்னேற்றங்கள் குறித்து விவாதித்தனர்.
புரோன்சிக்டாசிஸ் என்பது இருமலும் நெஞ்சு சளியும் ஏற்பட்டு அதனால் சுவாசம் தடைபடும் ஒருவித நோயாகும். இதை முன்னதாகவே கண்டறிந்து உரிய சிகிச்சை எடுக்காமல் விட்டுவிட்டால் நுரையீரல் பாதிக்கப்படும்.
இது குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடையேயும் மருத்துவர்களிடமும் போதுமான அளவில் இல்லை. பயிற்சி வகுப்பில் இதற்கான காரணங்கள் மற்றும் சிகிச்சை முறைகள் பற்றி விளக்கப்பட்டது. மூச்சுக்குழாய் அடைப்பை நீக்கும் விதமும் செய்து காண்பிக்கப்பட்டது.
கருத்தரங்கில் பேசிய கே.எம்.சி.ஹெச் மருத்து வமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி பேசுகையில், கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் நுரையீரல் நோய்களுக்கு தரமான சிகிச்சை வசதிகள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய லங் இன்ஸ்டிடியூட் துவக்கப்பட்டுள்ளது. நுரையீரல் நோயாளிகளுக்கு இது ஒரு வரப்பி ரசாதமாக இருக்கும். புரோன்சிக்டாசிஸ் நோய்க்காக நாட்டி லேயே முதல்முறையாக ஒரு பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடுகள் செய்து அதை வெற்றிகரமாக நடத்திய கே.எம்.சி.ஹெச். நுரையீரல் மருத்துவ குழுவினருக்கு பாராட்டுகள்.
தென்கிழக்கு ஆசியாவில் முதல்முறையாக ஈ-பஸ் என்ற அதி நவீன மருத்துவ முறையை 2007ம் ஆண்டிலேயே அறிமுகம் செய்த முன்னோடி மருத்துவமனை கே.எம்.சி.ஹெச். என தெரிவித்தார்.



