கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவல கத்தில் நேற்று சைபர் கிரைம் பிரிவு போலீஸ் சார்பில் இணைய வழி குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஷ் தங்கையா தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கூடுதல் கண்காணிப்பாளர் பிரபாகரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்டத்தில் சைபர் கிரைம் போலீசார் துரிதமாக செயல்பட்டு இணையதளம் மோசடியில் பணம் இழந்த 17 நபர்களுக்கு ரூ.85 லட்சத்து 18 ஆயிரத்து 105 ஐ மீட்டு உரியவர் களுக்கு திருப்பி ஒப்படைத்தனர்.

மேலும், கரூர் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலைய பகுதிகளில் செல்போன் களை இழந்த 163 நபர்களின் செல்போன்களை துரிதமாக கண்டுபிடித்து மீட்டு அவற்றையும் உரியவர்களிடம் வழங்கினர்.களவாடப்பட்ட பணம், தொலைந்து போன செல்போன் களை விரைவாக கண்டுபிடித்த காவல் துறையினரைப் பாராட்டி அவர்களுக்கு நற்சான்று மற்றும் வெகுமதியை மாவட்ட கண்காணிப்பாளர் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.



