fbpx
Homeபிற செய்திகள்அம்ருதா ஸ்கூல் ஆப் பிசினஸ் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ரூ.5.5 லட்சம் நன்கொடை வழங்கி அசத்தல்

அம்ருதா ஸ்கூல் ஆப் பிசினஸ் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ரூ.5.5 லட்சம் நன்கொடை வழங்கி அசத்தல்

அம்ருதா ஸ்கூல் ஆஃப் பிசினஸ் (ASB) இல் 2003-05 கல்வியாண்டில் படித்த மாணவர்கள், கோவை வளாகத்தில் தங்கள் 20-வது ஆண்டு விழாவை ஒன்றுகூடி கொண் டாடினர். இந்நிகழ்வானது 50 முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஒன்றிணைத்தது.

இந்தியா மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து முன்னாள் மாணவர்கள் தங்களது நண்பர்கள் மற்றும் பேராசிரியர்களைச் சந்தித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் தங்களது வகுப்பறைகளை மீண்டும் பார்வையிட்டபோது, தங்களது பசுமை நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளவும், அதனைக் குறித்து சிந்திக்கவும் முடிந்தது. இந்த நிகழ்வின் முக்கிய பகுதியாக, மாணவர்களின் வாழ்க்கையை மேம்படுத்திய பேராசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

நன்றியுணர்வின் ஒரு மனமார்ந்த அடையாள மாக, அம்ருதா ஸ்கூல் ஆஃப் பிசினஸ் முன்னாள் மாணவர் சங்கம், அம்ருதா ஸ்கூல் ஆஃப் பிசினஸ் உதவித்தொகை நிதிக்கு ரூ.5.5 லட்சத்தை வழங்கியது, எதிர்கால வணிகத் தலைவர்களை ஆதரிப்பதில் தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது. வளர்ச்சி, நிலைத்தன்மை மற்றும் கல்லூரி உடனான அவர்களின் நீடித்த பிணைப்பைக் குறிக்கும் வகையில் வளாகத்தில் 50 மரக்கன்றுகளையும் நட்டனர்.

இந்த நிகழ்வை ஸ்வாமி தபஸ்யாம்ருதானந்தபுரி, கோவை அம்ருதா வணிகப் பள்ளியின் டீன் டாக்டர் நவ சுப்பிரமணியம் மற்றும் முன்னாள் மாணவர் உறவுகள் மற்றும் நிர்வாக வலையமைப்பின் இயக்குனர் பேராசிரியர் ஜெய் மிஸ்ரா ஆகியோர் பங்கேற்றனர். அவர்கள் தங்கள் உரைகளில், முன்னாள் மாணவர் உறவுகளின் வலிமை, கல்வி மற்றும் இயற்கைக்கு ஆற்ற வேண்டிய கடமை குறித்து எடுத்துரைத்தனர்.

படிக்க வேண்டும்

spot_img